அட்லீ இயக்கி வரும் ஐவான் படக்கதையும், பேரரசு படக்கதையும் ஒன்றல்ல என திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி ‘ஜவான்’ படத்தின் கதை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘பேரரசு’ படத்துடைய கதை என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பான புகார் கொடுக்கப்பட்டது.
கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான ” பேரரசு” திரைப்படத்தை ரோஜா காம்பைன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்திருந்தது. மாணிக்கம் நாராயணன் என்பவர் அந்த நிறுவனத்திற்கு நிதி உதவி செய்திருந்தார். எனவே, ரோஜா காம்பைன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் காஜா மொய்தீன் தற்போது உயிரோடு இல்லாததால் அவரின் பட உரிமைகள் அனைத்தும் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணத்திடம் உள்ளது.
இதையும் படியுங்களேன்- விஜய் அணிந்திருந்த சட்டையின் விலை இவ்வளவா..? வெளியான ஷாக்கிங் சீக்ரெட்.!
எனவே அவர் “ஜவான் “திரைப்படம் “பேரரசு” திரைப்படத்தின் கதையை தழுவி எடுக்கப்படுகிறதாக தயாரிப்பாளர் சங்கத்தில் மாணிக்கம் நாராயணன் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி புகார் கொடுத்தார். அந்த புகார் மீதான விசாரணை வரும் 9-ஆம் தேதிக்கு மேல் நடத்த தயாரிப்பு சங்க நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், தற்போது இன்று அந்த புகாரை விசாரித்த தயாரிப்பாளர் சங்கம் அட்லீ இயக்கி வரும் ஜவான் படத்தின் கதையும், விஜய் காந்த் நடிப்பில் வெளியான பேரரசு படத்தின் கதையும் ஒன்று இல்லை என அறிவித்துள்ளது.
நேபாளம்: நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று (ஜன,7) நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணியளவில், நேபாள், திபெத் எல்லையில் 7.1 ரிக்டர்…
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிவேகமாக வந்த…
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இவிகேஎஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து…
சென்னை :இட்லி தோசைக்கு ஏற்ற பூண்டு பொடி தயார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். தேவையான…
சென்னை : ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ இ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததை…
மதுரை: டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்யக்கோரி, நரசிங்கம்பட்டியிலிருந்து மதுரை தபால் நிலையம் வரையில் முல்லை பெரியார் ஒருபோக பாசன…