உள்ளம் உருகுதையா.. தெய்வீக குரலுக்கு சொந்தக்காரர் டி.எம் சௌந்தரராஜன் பிறந்த தினம் இன்று..!
புகழ்பெற்ற மறைந்த பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜனின் 92-வது பிறந்த நாள் இன்று.
40 ஆண்டுகளமாக சினிமா துறையில் இருந்து வந்த பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் காதல், தத்துவம், சோகம், துள்ளல் என எல்லா வகை உணர்வுகளில் 10,000-க்கும் மேற்பட்ட பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். சுமார் 3,000 பக்திப் பாடல்கள், அரசியல் கட்சிகளின் கொள்கைகளை உயர்த்திப் பிடித்த பாடல்களை பாடியுள்ளார்.
இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு காலமானார். இவர் மண்ணைவிட்டு மறைந்தாலும் கூட அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் காலத்தால் அளிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. மேலும், இவருடைய பிறந்த நாளான இன்று அவருடைய நூற்றாண்டு விழாவை ஒட்டி, சென்னை மந்தைவெளியில் அவர் வாழ்ந்த வீடு அமைந்த சாலைக்கு ‘டி.எம். சௌந்தரராஜன் சாலை’ என்ற பெயரில் சாலை ஒன்று அமைந்துள்ளது.
இன்று சென்னையில் பிரமாண்டமாக இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. மேலும், இந்நிகழ்ச்சியில் டி.எம்.சௌந்தரராஜன் பாடிய பாடல்களை நினைவுகூரும் வகையில் இன்னிசைக் கச்சேரியும் நடக்கவுள்ளது. மேலும் ‘டி.எம். சௌந்தரராஜன் சாலை’ என்ற பெயரை முதல்வர் மு.க.ஸ்டாலின் சூட்டுகிறார் என்பதும் குறிப்பிடதக்கது.