சமுத்திரக்கனி : தற்போது இந்தியன் 2 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் ஜூலை 13-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. ப்ரோமோஷனுக்காக யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கலந்து கொண்ட சமுத்திரக்கனி இந்தியன் 2 படத்தை பற்றியும், விசாரணை படம் பற்றியும் மனம் திறந்துபேசியுள்ளார்.
இது குறித்து பேசிய சமுத்திரக்கனி ” எனக்கு பொதுவாகவே விருதுகள் மீது நம்பிக்கை இல்லை. விடுதலை படத்திற்காக தேசிய விருது கிடைத்தது மகிழ்சி தான். அந்த படத்திற்காக பட்ட கஷ்டங்கள் எல்லாம் எப்போதுமே மறக்க முடியாத ஒன்றாக இருக்கும். ஏனென்றால், அந்த அளவுக்கு படத்திற்காக கஷ்ட்டப்பட்டு இருந்தோம். ஒரு முறை படத்தின் ஒரு காட்சியை எடுக்கும்போது என்னுடைய காலில் பாம்பு சுற்றிவிட்டது.
மேலே இருந்து வெற்றிமாறன் பாம்பை உதறிவிட்டு மேலே வாருங்கள் என்று அசால்ட்டாக சொல்லுவார். அதைப்போல, படத்தில் வடிகாலில் குதிக்கும் காட்சி வரும். அந்த காட்சியை எடுக்கும்போது கீழே குதித்தேன். அப்போது தெரியாமல் வாயை துறந்துவிட்டேன். பிறகு முகத்தை வாயை கழுவிக்கொண்டு படத்தில் நடித்தேன்.
படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் முழுவதும் ஓடி கொண்டே இருப்போம். அந்த காட்சியை எடுக்கும்போது ரொம்பவே சோர்வாகிவிடும். பிறகு அந்த ரோட்டிலே அப்டியே படுத்துவிடுவோம். எங்களை கடந்து தான் பாம்புகள் எல்லாம் போகும். ரொம்பவே சோர்வாக இருந்ததால் பாம்பை பார்த்து கூட பயந்தும் ஓட முடியவில்லை. பாம்பை பார்த்துவிட்டு போ போ என்று சாதாரணமாக தான் இருந்தோம். மொத்தமாக படத்தின் படப்பிடிப்பு 35 நாட்கள் நடந்தது என்று நினைக்கிறன். படத்தின் படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு வந்த சில நாட்கள் கூட என்னால் தூங்கவே முடியவில்லை. தூங்கினால் கனவில் பாம்பு தான் வந்தது.
பாசத்திற்காக நிறைய படங்கள் செய்து வலி தான் ஏற்பட்டு இருக்கிறது. அந்த வலி எல்லாம் மறக்கவே முடியாது ” எனவும் விசாரணை படத்தில் நடித்த அனுபவம் பற்றி சமுத்திரக்கனி பேசினார். அதனை தொடர்ந்து இந்தியன் 2 படத்தை பற்றி பேசிய சமுத்திரக்கனி ‘ இந்தியன் படத்தின் முதல் பாகத்தில் கூட்டத்தில் ஒரு ஆளாக நடிக்க நான் ரொம்பவே முயற்சி செய்தேன். ஆனால், என்னால் முதல் பாகத்தில் நடிக்கமுடியாமல் போய்விட்டது. இரண்டாவது பாகத்தில் நான் நடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முதல் பாகத்தை போல இரண்டாவது பாகமும் அருமையாக இருக்கும். ரொம்பவே நிஜமாக எடுக்கப்பட்ட ஒரு அருமையான படைப்பு ” எனவும் சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…