#Divorce: முதல் முறையாக விவாகரத்து செய்ததை போட்டோஷூட் நடத்தி கொண்டாடிய சீரியல் நடிகை.!

shalini divorce photoshoot

இப்போதெல்லாம் நடிகைகள் தங்களது நிச்சயதார்த்தம், திருமணம் மற்றும் கர்ப்பகால போட்டோஷூட்களை நடத்தி வெளியிடுவது வழக்கம். ஆனால், முதன்முறையாக தமிழ் சீரியல் நடிகை ஒருவர் தனது விவாகரத்தை கொண்டாடும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by IRIS (@irisphotography77)

முள்ளும் மலரும் என்ற தமிழ் சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஷாலினி. சூப்பர் மாம் உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்ற்றுள்ளார். ஷாலினி ரியாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார், இந்த தம்பதிக்கு ரியா என்ற சிறிய மகள் உள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by shalini (@shalu2626)

சில மாதங்களுக்கு முன்பு, ஷாலினி, தனது கணவர் தன்னை மனதளவிலும், உடலளவிலும் கொடுமைப்படுத்துவதாகக் குற்றம் சாட்டி, விவாகரத்துக்கு வழக்கு தொடர்ந்து நிலையில், அவருக்கு இறுதியாக விவாகரத்து கிடைத்தது.

 

View this post on Instagram

 

A post shared by shalini (@shalu2626)

இந்நிலையில், இதனை போட்டோஷூட் நடத்தி கொண்டாடியுள்ளார் நடிகை ஷாலினி. சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் புகைப்படங்களில், நடிகை ஷாலினி தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை கிழித்து, அவரது மற்றொரு புகைப்படத்தை தனது காலால் மிதிப்பது போல் போஸ் கொடுத்திருக்கிறார்.

 

 

View this post on Instagram

 

A post shared by shalini (@shalu2626)

மேலும், இந்த புகைப்படங்களை வெளியிட்டு, இது குரல் இல்லாதவர்களுக்கு விவாகரத்து செய்யும் செய்தி. கெட்ட கல்யாணத்தை விட்டாலும் பரவாயில்லை. ஏனென்றால் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க தகுதியானவர். உங்களை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள். உங்கள் வாழ்க்கையைக் கட்டுப்படுத்தி, உங்களுக்கும் உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்கும் தேவையான மாற்றங்களைச் செய்யத் தயாராகுங்கள். விவாகரத்து தோல்வி அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by shalini (@shalu2626)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்