பணம் உலகத்திற்கு தீங்கு விளைவிக்கும் “பிச்சைக்காரன் 2” அசத்தல் டிரைலர் இதோ..!

Default Image

பிச்சைக்காரன்2 படத்தின் முதல்  ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.

பிச்சைக்காரன் 2 

pichaikkaran 2 update
pichaikkaran 2 update [Image Source : Twitter]

பிச்சைக்காரன் திரைப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகம் மும்மரமாக தயாராகி வருகிறது. இந்த இரண்டாவது பாகத்தை இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி தானே இயக்கி தானே நடித்து வருகிறார். படத்தில் அவருடன் காவ்யா தாபர், ரித்திகா சிங், மன்சூர் அலி கான், ராதா ரவி, ஜான் விஜய், தேவ் கில் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

பிச்சைக்காரன் 2 அப்டேட் 

vijayantony
vijayantony [Image Source : Twitter]
பிச்சைக்காரன் 2  படத்தின் 1-வது 4 நிமிடம், ஆரம்ப காட்சி ஸ்னீக் பீக் டிரெய்லர்  நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என நேற்று விஜய் ஆண்டனி தனது ட்வீட்டர் பக்கத்தில் போஸ்டர் ஒன்றை வெளியீட்டு அறிவித்திருந்தார். எனவே அந்த ஸ்னீக் பீக் எப்படி இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகமானது.
பிச்சைக்காரன் 2 ஸ்னீக் பீக் டிரெய்லர்

நேற்று அறிவித்ததுபோல படத்திற்கான பிச்சைக்காரன் 2 படத்தின்  4 நிமிட காட்சி  தற்போது வெளியிடபட்டுள்ளது. ட்ரைலரில் ” ஹிட்லர் எனும் பெயரை கொண்ட ஒருவர் எலியை பிடித்து கொண்டு ஒரு பாம்பிற்கு இறையாக கொடுக்கிறார்”  இதில் விஜய்  ஆண்டனி  வரவில்லை. படத்தின் வில்லன் தேவ் கில் மட்டும் வருகிறார்.  பணத்தால் என்னென்ன பிரச்சனைகள் வருகிறது என்பதனை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பொது வெளியான ட்ரைலரை வைத்து பார்க்கையில் படம் கண்டிப்பாக முதல் பாகத்தை விட வித்தியாசமானதாக இருக்கும் என தெரிகிறது. மேலும் இந்த படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்