வேற லெவல்! ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர் இதோ!

TheGOAT2ndLook

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் தான் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. இந்த திரைப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, லைலா, அரவிந்த் ஆகாஷ், VTV கணேஷ், பிரேம்கி அமரன், மோகன், சினேகா, பிரசாந்த் ஜெயராம், பிரபுதேவா, அஜ்மல் அமீர் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு ஒரு பக்கம் விறு விறுப்பாக போய்க்கொண்டு இருக்கும் நிலையில், படத்தின் அப்டேட்டுகளும் ஒரு பக்கம் வர தொடங்கியுள்ளது.

நடிகை ரகுல் ப்ரீத் சிங்க்கு விரைவில் டும்..டும்..டும்?

அந்த வகையில் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தலைப்புடன் நேற்று வெளியானது. அந்த போஸ்டரில் நடிகர் விஜய் இளமையான தோற்றம் மற்றும் வயதான தோற்றத்தில் இருந்தார். பர்ஸ்ட் லுக் போஸ்டரை தொடர்ந்து ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, தற்போது ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் விஜய் கையில் துப்பாக்கியுடன் பைக்கில் செல்கிறார். ஹாலிவுட் ரேஞ்சில் படம் எடுக்கப்பட்டு வருவது போல இந்த போஸ்டர் இருப்பதால் படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live update
Union Minister Amit shah
Pushpa2
TVK Vijay - Union minister Amit shah
chennai rains
OneNation OneElection - Vijay Antony
Savuku Sankar arrested