விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் ! ‘GOAT’ படத்தின் புது அப்டேட்!

விஜய் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் தான் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்த திரைப்படம் விஜயின் 68-வது படம் என்பதால் படத்திற்கு தற்காலிகமாக தளபதி 68 என்று தலைப்பு வைக்கப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் தலைப்பு அறிவிக்கப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டு படத்தின் தலைப்புடன் பர்ஸ்ட் லுக் போஸ்டருடம் வெளியானது.
போஸ்டரில் இரண்டு விஜயின் கெட்டப்கள் இடம்பெற்று இருந்தது. படத்திற்கு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (TheGreatestOfAllTime) என்று தலைப்பு வைக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கும் ரசிகர்களுக்கு மத்தியில் பெரிய அளவில் வரவேற்பும் கிடைத்தது.
இந்த நிலையில் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் இரண்டாம் லுக் போஸ்டரும் வெளியாகவுள்ளது. ரசிகர்களுக்கு நேற்றை போல இன்றும் புத்தாண்டு ட்ரீட் கொடுக்கும் விதமாக இருக்கவேண்டும் என்ற காரணத்தால் படத்தின் இரண்டாவது லூக் போஸ்டர் இன்று வெளியாகும் என வெங்கட் பிரபு அறிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025