ஆஸ்கர் லெவலுக்கு சென்ற பார்க்கிங்! குவியும் பாராட்டுக்கள்!

Published by
பால முருகன்

சென்னை : பார்க்கிங் படத்தின் திரைக்கதை ஆஸ்கர் அகாடமி ஸ்கிரிப்ட் நூலகத்தில் இடம்பெற்றுள்ளது.

ஹரிஷ் கல்யாண் சினிமா வாழ்க்கையில் பெரிய வெற்றிப்படமாக அமைந்த படம் என்றால் பார்க்கிங் படத்தை சொல்லலாம். இந்த திரைப்படத்தினை இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கி இருந்தார். படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், இந்துஜா ரவிச்சந்திரன், பிராத்தனா நாதன், இளவரசு, ரமா, வெற்றிவேல் ராஜா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள்.

கார் ஒன்றை பார்க்கிங் செய்வதால் இருவருக்கும் ஏற்பட கூடிய பிரச்னையை கதையாக உருவாக்கி அதனை படமாக எடுத்து இயக்குனர் ராம்குமார் மக்களின் மனதை கவர்ந்துவிட்டார் என்றே சொல்லலாம். எதார்த்தமான கதையம்சத்தை இந்த படம் கொண்டிருந்த காரணத்தால் படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்றே சொல்லலாம்.

6 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆனது. படம் வசூல் ரீதியாக மட்டும் 17 கோடி வரை வசூல் செய்து பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது. இந்நிலையில், பார்க்கிங் படத்திற்கு ஆஸ்கர் அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அதாவது, ஆஸ்கர் அகாடமி ஸ்கிரிப்ட் நூலகத்தில் ‘பார்க்கிங்’ திரைப்படத்தின் திரைக்கதை இடம்பெற்றுள்ளது. இதனை நெகிழ்ச்சியுடன் ஹரிஷ் கல்யான் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது ” பார்க்கிங் படம் உங்கள் இதயங்களிலிருந்து ஆஸ்கார் நூலகம் வரை. ஒரு நல்ல கதை அதற்கான இடத்தை தானே தேடி போகும்.இந்த நம்பமுடியாத பயணத்திற்கும் என் பார்க்கிங் அணிக்கு நன்றி” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து, அவருக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 hour ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

7 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

7 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

7 hours ago