ஆஸ்கர் லெவலுக்கு சென்ற பார்க்கிங்! குவியும் பாராட்டுக்கள்!
சென்னை : பார்க்கிங் படத்தின் திரைக்கதை ஆஸ்கர் அகாடமி ஸ்கிரிப்ட் நூலகத்தில் இடம்பெற்றுள்ளது.
ஹரிஷ் கல்யாண் சினிமா வாழ்க்கையில் பெரிய வெற்றிப்படமாக அமைந்த படம் என்றால் பார்க்கிங் படத்தை சொல்லலாம். இந்த திரைப்படத்தினை இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கி இருந்தார். படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், இந்துஜா ரவிச்சந்திரன், பிராத்தனா நாதன், இளவரசு, ரமா, வெற்றிவேல் ராஜா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள்.
கார் ஒன்றை பார்க்கிங் செய்வதால் இருவருக்கும் ஏற்பட கூடிய பிரச்னையை கதையாக உருவாக்கி அதனை படமாக எடுத்து இயக்குனர் ராம்குமார் மக்களின் மனதை கவர்ந்துவிட்டார் என்றே சொல்லலாம். எதார்த்தமான கதையம்சத்தை இந்த படம் கொண்டிருந்த காரணத்தால் படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்றே சொல்லலாம்.
6 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆனது. படம் வசூல் ரீதியாக மட்டும் 17 கோடி வரை வசூல் செய்து பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது. இந்நிலையில், பார்க்கிங் படத்திற்கு ஆஸ்கர் அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
அதாவது, ஆஸ்கர் அகாடமி ஸ்கிரிப்ட் நூலகத்தில் ‘பார்க்கிங்’ திரைப்படத்தின் திரைக்கதை இடம்பெற்றுள்ளது. இதனை நெகிழ்ச்சியுடன் ஹரிஷ் கல்யான் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது ” பார்க்கிங் படம் உங்கள் இதயங்களிலிருந்து ஆஸ்கார் நூலகம் வரை. ஒரு நல்ல கதை அதற்கான இடத்தை தானே தேடி போகும்.இந்த நம்பமுடியாத பயணத்திற்கும் என் பார்க்கிங் அணிக்கு நன்றி” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து, அவருக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
From your hearts to the #Oscars library.
Oru Nalla Kadhai adhukaana edatha thaney thedi pogum. 🙏 #Parking #Academy
Grateful for this incredible Journey. Thank you! Love to my team ❤️🙏 @ImRamkumar_B @Actress_Indhuja @sinish_s @jsp2086 @philoedit @SoldiersFactory… pic.twitter.com/p6AOwsjlZU
— Harish Kalyan (@iamharishkalyan) May 23, 2024