கடும் எதிர்ப்பு: கேரளாவின் பல இடங்களில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரையிட மறுப்பு.!

The Kerala Story

தி கேரளா ஸ்டோரி என்ற சர்ச்சைக்குரிய திரைப்படத்தை திரையிட வெளியீட்டு நாளான இன்று கேரளாவின் பல மாவட்டங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தி கேரளா ஸ்டோரி படத்தை திரையிட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இப்படத்தில் கேரள பெண்கள் ISIS தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்படுவதாக கூறப்பட்டிருக்கிறது. இதற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தடை கோரியது. படத்துக்கு தடை விதிக்க நீதிமன்றம் நேற்று மறுத்ததை அடுத்து இறுதியாக இன்று நாடு முழுவதும் படம் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், கலவரம் ஏதும் நடக்காமல் இருக்க கேரளா மற்றும் தமிழக திரையரங்குகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும், படத்தை திரையிடுவதை நிறுத்தக் கோரி கொச்சியில் உள்ள தியேட்டர் முன்பு இளைஞர் காங்கிரஸ் போராட்டம் நடத்தினர். கேரளாவில் இந்த படத்திற்கு கடும் எதிர்ப்புகள் நிலவுவது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், கொச்சியில் உள்ள லுலு மால் மற்றும் சென்டர் ஸ்கொயர் மாலில் உள்ள தியேட்டர் உரிமையாளர்கள் படத்தைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். இதேபோல், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, கண்ணூர், வயநாடு ஆகிய மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளும் படத்தை திரையிடுவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்