கார் ரேஸில் பறக்கும் அஜித்.., பரபரக்கும் அட்டவணை ஏப்ரல் முதல் அக்டோபர் வரை…

நடிகர் அஜித்தின் அடுத்தடுத்த கார் பந்தைய போட்டிகள் குறித்த அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.

Ajithkumar Racing

சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித் குமார். இதற்காக, கடந்த 2024 ஆம் ஆண்டு அவர் “அஜித் குமார் ரேசிங்” என்ற பெயரில் சொந்த கார் பந்தைய அணியை உருவாக்கி சர்வதேச போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார்.

2025 ஜனவரியில் துபாயில் நடைபெற்ற கார் பந்தைய போட்டியில், அஜித் குமார் ரேசிங் அணி 911 ஜிடி3 ஆர் (992) பிரிவில் மூன்றாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தது. அடுத்து மார்ச்சில் இத்தாலியில் நடைபெற்ற முகெல்லோ 12 மணி நேர கார் பந்தய போட்டியில், அஜித் அணி GT992 பிரிவில் மீண்டும் மூன்றாவது இடத்தைப் பிடித்து தனது திறமையை நிரூபித்தது.

இதனை அடுத்து, தற்போது அவரது அடுத்தடுத்த கார் பந்தைய போட்டிகள் குறித்த அட்டவணை வெளியாகியுள்ளது. ஐரோப்பியன் சீரிஸ் GT4 கார் பந்தைய போட்டி குறித்த அட்டவணை வெளியாகி உள்ளது அதில் ஏப்ரல் 11 முதல் 13, மே 16 முதல் 18, ஜூன் 26 முதல் 29, ஜூலை 18 முதல் 20, ஆகஸ்ட் 29 முதல் 31, அக்டோபர் 10 முதல் 12 ஆகிய தேதிகளில் அஜித்குமார் ரேஸிங் குழு பங்கேற்க உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்