லீக்கான “லியோ” காட்சி…அதிர்ச்சியாகி படக்குழு எடுத்த அதிரடி முடிவு.!?
விஜய் நடித்து வரும் லியோ படத்திற்கான காட்சி ஒன்று இணையத்தில் கசிந்த நிலையில், படக்குழு அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளது.
லியோ
ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் லியோ படத்தை பார்பதற்காக ஆவலுடன் காத்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கியத்தில் விஜய் நடித்து வரும் இந்த படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் காஷ்மீர் பகுதியில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறது.
லீக்கான லியோ காட்சி
லியோ படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் விஜய் அசத்தலான கேங்ஸ்டர் லுக்கில் இருக்கும் புகைப்படம் ஒன்றும், படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சி ஒன்றும் இணையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மிகவும் வைரலானது.
படக்குழு எடுத்த அதிரடி முடிவு.?
லியோ படத்தின் காட்சி இணையத்தில் கசிந்ததை தொடர்ந்து படக்குழு அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அது என்னவென்றால், லியோ படத்தின் படப்பிடிப்புக்கு வருபவர்கள் செல்போன் உபோயோக படுத்த தடை விதித்துள்ளனர். மேலும், படப்பிடிப்பு தளத்திற்கு வருபவர்கள் முழுவதுமாக செக் செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
படத்தை பார்க்க தமிழ் சினிமா மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். எனவே படத்தின் எதிர்பார்ப்பு குறைந்து விட கூடாது, படத்தில் விஜையின் லுக்கையும் நேரடியாக படத்தில் வந்து பார்க்கவேண்டும் என்பதற்காகவே படக்குழு இந்த அதிரடியான முடிவை எடுத்துள்ளனர்.