சென்னை : தக்லைஃப் படத்தில் இருந்து ஜெயம் ரவி விலகியதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக்லைஃப் படத்தில் ஜெயம் ரவி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், வேறொரு படத்தின் தேதி பிரச்சனை காரணமாக படத்தில் இருந்து ஜெயம் ரவி விலகியதாகவும், படத்தில் அவருடைய கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
ஆனால், உண்மையில் சிம்பு ஜெயம் ரவி கதாபாத்திரத்தில் நடிக்கவில்லையாம், அதைப்போல ஜெயம் ரவியும் தேதி பிரச்சனை காரணமாக படத்தில் நடிக்க மறுக்கவில்லையாம். தக் லைஃப் படத்தை மணிரத்னம் கமல்ஹாசனுடன் இணைந்து தயாரிக்கிறார். எனவே, படத்தில் ஜெயம் ரவி வரும் காட்சியே குறைவான காட்சி தானாம். இதனால், குறைவான நாட்கள் தான் அவருடைய கால்ஷீட் தேவைப்பட்டதாம்.
எனவே, குறைவான நாட்கள் தான் உங்களுடைய கால்ஷீட் வேண்டும் இவ்வளவு தான் சம்பளம் தருவேன் என ஜெயம் ரவி கேட்ட சம்பளத்தை விட குறைவாக தான் கொடுப்பேன் என மணிரத்னம் கூறினாராம். ஆனால், இதற்கு ஜெயம் ரவி சற்றுக்கடுப்பாகி ஏற்றுக் கொள்ளவில்லையாம். எனவே. சம்பளம் குறைவாக இருக்கிறது என காரணம் காட்டி படத்தில் இருந்து ஜெயம் ரவி விலகினாராம்.
அதைப்போல, தக்லைஃப் படத்தில் ஜெயம்ரவி நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கவில்லையாம். படத்தில் சிம்புக்காகவே ஒரு காதாபாத்திரம் உருவாக்கப்பட்டு ஜெயம் ரவி விலகிய உடனே படத்தின் கதையில் இயக்குனர் மணிரத்னம் மாற்றம் செய்துவிட்டாராம். படம் முழுவதும் சிம்பு மற்றும் கமல்ஹாசனை சுற்றி தான் நகருமாம். இந்த தகவலை பிரபல யூடியூப் சேனலான வலைப்பேச்சு தெரிவித்துள்ளது.
மேலும், இந்த தக்லைஃப் திரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, அபிராமி, நாசர், சன்யா மல்ஹோத்ரா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். படத்திற்க்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பும் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…