பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா லிகர் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தை பிரபல இயக்குனரான பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ளார். படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடிகை அனன்யா பாண்டே நடித்துள்ளார். மைக் டைசன், மகரந்த் தேஷ்பாண்டே, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
தர்மா புரொடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரிக்க, இசையமைப்பாளர்கள் பின்னை இசை மணி சர்மா, பாடல்கள் விக்ரம் மாண்ட்ரோஸ், தனிஷ்க் பாக்சி ஆகியோர் பணியாற்றுகிறார்கள். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதுவரை இல்லாத விதமாக விஜய் தேவரகொண்டா இப்படத்தில் மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனாலே படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. இந்த நிலையில், தற்போது படத்திலிருந்து புதிய போஸ்டர் ஒன்று வெளியிடபட்டுள்ளது. போஸ்டரில் விஜய் தேவரகொண்டா தனது கையில் ரோஜாப் பூ கோந்தை கையில் பிடித்தபடி நிர்வாணமாக போஸ் கொடுப்பதைக் காணலாம். இந்த புத்தம் புதிய போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக விஜய் தேவரகொண்டா கொண்டா தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது “இந்த லிகர் திரைப்படம் என்னிடம் இருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டது. மனதளவிலும், உடல் அளவிலும் இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் சவாலானது” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த போஸ்ட்டரை பார்த்த நெட்டிசன்கள் இதற்கு முன்பு அமீர்கான் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான பி.கே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை ஒப்பிட்டு அமீர்கானை அப்படியே ஃபாலோ செய்த விஜய் தேவரகொண்டா என தெரிவித்து வருகிறார்கள்.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…