Categories: சினிமா

ராஷ்மிகா மந்தனா அணிந்திருக்கும் இந்த சேலையின் விலை எவ்வளவு தெரியுமா?

Published by
பால முருகன்

நடிகை ராஷ்மிகா மந்தனா குறுகிய காலத்திலே மிகவும் பிரபலமாகி முன்னணி நடிகையாக வளர்ந்துவிட்டார் என்றே சொல்லலாம். இப்போது அவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் மற்றும் அவருக்கு இருக்கும் மார்க்கெட் பற்றி சொல்லியே தெரியவேண்டாம். எனவே ரசிகர்களுக்காகவே நல்ல கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து படங்களில் நடித்தும் வருகிறார்.

படங்களில் நடிப்பது மட்டுமின்றி தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவதன் மூலமும் ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார். அதிகமாக சேலையில் ஆர்வம் காட்டும் நடிகை ராஷ்மிகா மந்தனா அடிக்கடி சேலை அணிந்துகொன்டு புகைப்படங்களையும் வெளியீட்டு வருகிறார். குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட ரோஸ் நிறசேலையில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார்.

பேட்டி ஒன்றில் கூட உங்களுடைய க்ரஸ் யார் என்று கேட்டதற்கு சேலை தான் என்னுடைய க்ரஸ் என்று கூறியிருந்தார். அந்த அளவிற்கு சேலை மீது ரொம்ப பிரியம் கொண்ட நடிகை ராஷ்மிகா சேலை வாங்குவதில் செலவு அதிகமாக செய்து வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், அவர் சமீபத்தில் அணிந்து புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார் ரோஸ் நிற சேலையின் விலை எவ்வளவு என்பது குறித்த தகவல் கிடைத்துள்ளது.

இது ரொம்ப ஓவர்! படக்குழுவுக்கு கண்டிஷன் போடும் ராஷ்மிகா மந்தனா?

அதன்படி, ராஷ்மிகா மந்தனா அணிந்து இருக்கும் அந்த சேலையில் விலை கிட்டத்தட்ட 1,90,000 இருக்குமாம். இந்த சேலையை அவருக்கு வடிவமைத்து கொடுத்தது பிரபல டிசைனரான அர்பிதா மேத்தா தான் வடிவமைத்து கொடுத்தாராம். ராஷ்மிகா மந்தனா  அணிந்துள்ள அந்த சேலையின் விலையை பார்த்து அனைவரும் மிரண்டு போய் உள்ளனர்.

மேலும் நடிகை ராஷ்மிகா மந்தனா கடைசியாக அனிமல் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த அனிமல் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மந்தனா அடுத்ததாக அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா 2 திரைப்படத்திழும் நடித்து வருகிறார்.  இந்த புஷ்பா 2 திரைப்படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக  உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

“யார் அந்த தியாகி? பதில் சொல்லுங்க முதலமைச்சரே.,” இபிஎஸ் சரமாரி கேள்வி!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…

23 minutes ago

CSK மீதான விமர்சனம்.., “இனி அப்படி நடக்காது” விளக்கம் கொடுத்த அஸ்வின் யூடியூப் சேனல்!

சென்னை : நடப்பு ஐபிஎல் சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி…

53 minutes ago

அதிமுக வெளிநடப்பு.. சிங்கிளாக பேட்ஜை கழற்றிவைத்துவிட்டு பேசிய செங்கோட்டையன்.!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…

2 hours ago

தமிழ்நாடு பாஜக ‘புதிய’ தலைவர் யார்? பிரதமர் அருகில் கடைசி நேர இருக்கை ஒதுக்கீடு?

சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை பொறுப்பில் இருக்கிறார். இவர் விரைவில் மாற்றம் செய்யப்படுகிறார் என்றும், விரைவில்…

2 hours ago

மசூதியின் மீது ஏறி காவிக் கொடி கட்ட முயன்ற இந்துத்துவா அமைப்பினர்! உ.பி.யில் பரபரப்பு சம்பவம்.!

உத்தரபிரதேசம் : நேற்று, நாடு முழுவதும் இந்து பண்டிகையான ராம நவமி கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்…

2 hours ago

யார் அந்த தியாகி? “நொந்து போய் நூடுல்ஸ் ஆகிய அதிமுகவினர்” மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…

3 hours ago