‘எங்களை மன்னித்து விடுங்கள்’! மணிகண்டனின் தேசிய விருதை திருப்பிக் கொடுத்த திருடர்கள்!
கடைசி விவசாயி படத்தின் இயக்குனர் எம்.மணிகண்டன் திரைப்படங்களை இயக்குவதன் காரணமாக தற்போது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். ஆனால், அவருடைய சொந்த ஊர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தான். அங்கு தான் அவருடைய வீடு இருக்கிறது. தொழில் காரணமாக தற்போது சென்னையில் அவர் வசித்து வருகிறார்.
இருப்பினும் எம்.மணிகண்டன் பொருட்கள் மற்றும் பணங்கள் விருதுகள் ஆகியவற்றை உசிலம்பட்டியில் இருக்கும் வீட்டில் வைத்திருந்துள்ளார். வீட்டை கண்காணிப்பாக பார்க்கவேண்டும் என்பதால் எம்.மணிகண்டன் ட்ரைவர்கள் தினமும் வீட்டை பார்த்துவிட்டு நாய்க்கு சாப்பாடு போட்டு கண்காணித்து வந்தனர்.
அப்போது கடந்த 9-ஆம் தேதி சில மர்ம நபர்கள் வீட்டில் இருந்த விருது மற்றும் பணம் என அனைத்தையும் திருடி சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து, வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தை ட்ரைவர்கள் போலீசாருக்கும் இயக்குனர் மணிகண்டனுக்கு தெரிவித்தனர். உடனடியாக உசிலம்பட்டி காவல்துறையினர் விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
வசூலில் சரிய தொடங்கிய லால் சலாம்! 4 நாட்களில் இவ்வளவா?
முதற்கட்ட விசாரணையில் கடைசி விவசாயி திரைப்படத்திற்காக பெற்ற இரு தேசிய விருதுக்கான வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் லட்சம் ரூபாய் ரொக்கம், 5 பவுன் தங்க நகைகள் திருடு போயிருந்தது தெரிய வந்தது. இது பற்றி வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணையும் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில், இந்த கொள்ளை சம்பவத்தில் திடீர் டிவிஸ்டாக ஒன்று நடந்துள்ளது. அது என்னவென்றால், இயக்குனர் மணிகண்டன் வீட்டில் கொள்ளையடித்த மர்ம நபர்கள் தேசிய விருதுகளை மீண்டும் வைத்துவிட்டு, மன்னிப்பு கடிதம் வைத்துச் சென்றுள்ளனர். அதில் ” “அய்யா எங்களை மன்னித்து விடுங்கள் உங்கள் உழைப்பு உங்களுக்கு” என எழுதி வைத்து விட்டு சென்றுள்ளனர்.