andrea jeremiah vada chennai [file image]
வடசென்னை 2 : தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு கேங்ஸ்டர் படங்களின் பட்டியலில் இருப்பது வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை படத்தை சொல்லலாம். கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் 50 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. படத்தின் முதல் பாகம் முடியும் போது அனுப்புவின் எழுச்சி தொடரும் என காட்டப்பட்டிருக்கும்.
எனவே, இரண்டாவது பாகம் எப்போது உருவாகும்? அன்புவின் எழுச்சியை எப்போது பார்க்கலாம் என்று தான் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இருப்பினும், நடிகர் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் தங்களுடைய கமிட் ஆகி இருக்கும் படங்களில் பிசியாக இருந்த காரணத்தால் இன்னும் வடசென்னை 2 படம் தொடங்கப்படாமல் இருக்கிறது. வரும் ஆண்டுகளில் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடசென்னை படத்தில் எல்லாருடைய கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்பட்டது. அதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் ஆண்ட்ரியா நடித்த சந்திரா கதாபாத்திரத்தை சொல்லலாம். இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஆண்ட்ரியா வடசென்னை 2 குறித்து பேசியுள்ளார்.
புதுச்சேரியில் நடந்த நகைக்கடை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகை ஆண்ட்ரியா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது ” வடசென்னை 2 எடுப்பார்களா? இல்லையா? என்பது பற்றி வெற்றிமாறனிடம் தான் கேட்கவேண்டும். அவர் எடுத்து வடசென்னை 2 வந்தால் கண்டிப்பாக சந்திரா கதாபாத்திரத்தில் நான் நடிப்பேன். அதில் எந்த சந்தேகமும் இல்லை” என தெரிவித்துள்ளார். ஆண்ட்ரியா கூறியதை பார்த்த ரசிகர்கள் வடசென்னை அன்புவின் எழுச்சிக்கு காத்திருக்கிறோம் என கூறி வருகிறார்கள்.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…