விமர்சனங்கள் எதிர்மறை தான்..ஆனா வசூல் தாறுமாறு…மிரள வைக்கும் இந்தியன் 2!!

இந்தியன் 2 : கடந்த ஜூலை 12-ஆம் தேதி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து வந்தாலும் படத்தை பாக்க மக்கள் கூட்டம் திரையரங்குகளில் அலைமோதி கொண்டு இருக்கிறது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு படத்திற்கான டிக்கெட் புக்கிங் மிகவும் மும்மரமாக போய்க்கொண்டு இருக்கிறது.
இதன் காரணமாக விமர்சனங்கள் அனைத்தையும் படத்தின் வசூல் தவிடுபுடி ஆக்கி உள்ளது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு படத்திற்கு வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஏற்கனவே, இந்தியன் 2 திரைப்படம் உலக அளவில் வெளியான இரண்டு நாட்களில் கிட்டத்தட்ட 80 கோடிகள் மட்டுமே வசூல் செய்துள்ளாதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
அதனை தொடர்ந்து படம் வெளியான 3 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்து இருக்கிறது. அதன்படி, இந்தியன் 2 படம் தமிழகத்தில் 45 கோடி வசூலும், உலகம் முழுவதும் 140 லிருந்து 150 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. படத்திற்கு இன்னும் கூட்டம் அதிகரித்து வருவதால் வரும் நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மொத்தமாக இந்தியன் 2 படம் 250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருக்கிறது. படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்த நிலையில், படத்தின் பட்ஜெட்டை தாண்டி வசூல் செய்யுமா? என்ற கேள்வி எழும்பிய நிலையில், இப்போது படத்திற்கு வசூல் நன்றாக கிடைத்து வருவதால் கண்டிப்பாக பட்ஜெட்டை தாண்டி படம் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025
வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!
April 25, 2025