மீண்டும் இணையும் மருது கூட்டணி.? விஷாலின் அடுத்த சம்பவம் லோடிங்….
நடிகர் விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான வீரமே வாகை சூடும் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் அந்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இதனால் விஷால் மீண்டும் ஒரு வெற்றிப்படம் கொடுக்கவேண்டும் என நோக்கத்தில் உள்ளார்.
இதனால், இயக்குனர் முத்தையாவிடம் ஒரு கதை கேட்டு அந்த கதைப்பிடித்துவிட்டதாம். இதனால் விஷால் அடுத்ததாக முத்தையா இயக்கத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கிராமத்து பின்ணணியில் இந்த படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.
முத்தையா -விஷால் இணையும் இந்த படத்தை ஜி நிறுவனத்துடன் இணைந்து கார்த்திக் சுப்புராஜ் தனது பெஞ்ச் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்பு முத்தையா இயக்கத்தில் நடிகர் விஷால் மருது என்ற படத்தில் நடித்திருந்தார். குடும்ப கதை செண்டிமன்ட் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த படம் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியானது. வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.