இந்தியில் ரீமேக் ஆகும் விஜய்சேதுபதியின் படம் !
புஷ்கர் – காயத்ரி இணைந்து இயக்கியிருந்த படம் ‘விக்ரம் வேதா’. கடந்த ஆண்டு (2017) வெளியான இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டான இதில் மாதவன் போலீஸாகவும், விஜய் சேதுபதி கேங்ஸ்டராகவும் நடித்திருந்தனர்.
மேலும், ‘மதயானைக் கூட்டம்’ கதிர், ‘யு-டர்ன்’ ஷரதா ஸ்ரீநாத், வரலக்ஷ்மி சரத்குமார், ஹரிஷ் பெராடி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். சாம்.சி.எஸ். இசையமைத்திருந்த இதற்கு பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்திருந்தார், ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார். ‘Y NOT ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.சஷிகாந்த் பிரம்மாண்டமாக தயாரித்திருந்தார்.
தற்போது, இப்படம் ஹிந்தியில் ரீமேக்காகவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. ஒரிஜினல் வெர்ஷனை இயக்கிய புஷ்கர் – காயத்ரி இருவருமே ஹிந்தி வெர்ஷனையும் அதே பெயரில் இயக்கத் திட்டமிட்டுள்ளனர். ‘Y NOT ஸ்டுடியோஸ் – ப்ளான் C ஸ்டுடியோஸ் – ரிலையென்ஸ் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனங்கள் இணைந்து இதனை தயாரிக்கவுள்ளதாம். வெகு விரைவில் இந்த படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் பணியாற்றவிருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.