‘அயலான்’ படத்திற்கு வந்த சிக்கல்.! சோகத்தில் மூழ்கிய சிவகார்த்திகேயன்.!
சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ திரைப்படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. வைபவ் நடித்துள்ள ‘ஆலம்பனா’ திரைப்படத்தை வெளியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு 2 படங்களையும் தயாரித்த KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் ரூ.14.70 கோடி கடனை தராமல் படங்களை வெளியிடுவதாக DSR பிலிம்ஸ் வழக்கு தொடர்ந்த நிலையில், இரு படங்களையும் 4 வாரங்களுக்கு வெளியிடக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விரைவில் கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சுமுக முடிவை எட்டும் என நம்பப்படுகிறது.
இதில், நடிகர் வைபவ் நடித்துள்ள ‘ஆலம்பனா’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாக இருந்தது. ஆனால், நேற்று இந்த தடை உத்தரவு காரணமாக இன்று வெளியாகவில்லை. மேலும், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை உண்டாக்கியுள்ள ‘அயலான்’ திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருகிறது.
பிரபல ஹிந்தி நடிகருக்கு மாரடைப்பு…மருத்துவனையில் தீவிர சிகிச்சை.!
அயலான்
இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அயலான்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். மேலும், யோகி பாபு, பால சரவணன், பானுப்ரியா, கருணாகரன், இஷா கோப்பிகர், ஷரத் கேல்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
பிரபல ஹிந்தி நடிகருக்கு மாரடைப்பு…மருத்துவனையில் தீவிர சிகிச்சை.!
ஆலம்பனா
வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள காமெடி படமான “ஆலம்பனா” படத்தில் ரோபோ ஷங்கர், காளி வெங்கட், பார்வதி நாயர் மற்றும் முனிஷ்காந்த் ஆகியோர் ஜெனி வேடத்தில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் பரி கே விஜய் இயக்கியுள்ள இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் மற்றும் கௌஸ்துப் என்டர்டெயின்மென்ட்தயாரிக்க, ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.