தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றமா?

Thangalaan

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் தங்கலான். இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார். பசுபதி பார்வதி உள்ளிட்ட பல பிரபலங்களும் படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தினை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

இந்த திரைப்படத்திற்கான ட்ரைலர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியிருந்தது. இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26ம் தேதி தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் முன்னிட்ட மொழிகளில் வெளியாகயுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது.

தப்பான ஒருத்தரை காதலிச்சிட்டேன்! தனுஷ் பட நடிகை வேதனை! 

இருந்தாலும் தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் இன்னும் முழுவதுமாக முடியாத காரணத்தினால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட உள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன் படி, தங்கலான்  திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜனவரி மாதம் படம் வெளியானால் அது சரியாக இருக்காது மார்ச் மாதம் படம் வெளியானால் சரியாக இருக்கும். அதற்குள் படத்தின் வேலைகள் அனைத்தும் முடிவடைந்து விடும் என்று படக்குழு முடிவெடுத்து படத்தை தாமதமாக வெளியிட முடிவு செய்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உண்மையா அல்லது வதந்தியா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்