kavin - star [File Image]
நடிகர் கவின் நடிப்பில் கடைசியாக வெளியான டாடா திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது. டாடா படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் கவின் பியர் பிரேமா காதல் படத்தை இயக்கிய பிரபல இயக்குனரான இளன் இயக்கத்தில் ஸ்டார் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
கவின் நடிக்கும் தனது நான்காவது படமான ‘ஸ்டார்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படக்குழு 2024 ஆம் ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு, பிப்ரவரி 14 ஆம் தேதி படத்தை வெளியிட திமிட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகினது.
ஏற்கனவே, பியர் பிரேமா காதல் எனும் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படத்தை இயக்கிய இளன் கண்டிப்பாக இந்த படத்தையும் இளைஞர்களை கவரும் வகையில் எடுத்திருப்பார் என்றும், இதனால், காதலர் தினத்தன்று வெளிவரவிருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் முன்கூட்டியே பிப். 9ம் தேதியே இந்தப்படம் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.
இதனால், காதலர் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்த்த அவரது ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தை அளித்துள்ளது. மேலும், படத்தின் டீசர், டிரைலர் மற்றும் ப்ரோமஷன் பணிகள் 2024ல் ஜனவரி மாதம் முதல் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
பிக்பாஸில் இருந்து வெளியேறிய பிரதீப்புக்கு ஆறுதல் சொன்ன கவின்-சினேகன்!
இதற்கிடையில், அவரது ஐந்தாவது படத்தின் படப்பிடிப்பும் முடியும் தருவாயில் உள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படம் மூலம் நடன இயக்குனர் நடிகர் சதீஷ் கிருஷ்ணனின் இயக்குனராக அறிமுகமாகிறார். கவின் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி ஆகியோர் நடிக்க மிஷ்கின் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சென்னை : தமிழ்நாட்டில் தெருநாய்க்கடி சம்பவங்கள் என்பது சமீப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருகின்றன, உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், இந்த…
பர்ஹைட் : ஜார்க்கண்டின் சாஹேப்கஞ்ச் மாவட்டத்தின் பர்ஹைட் என்கிற பகுதியில் 2 சரக்கு ரயில்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 2…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் கடந்த மார்ச் 28ம் தேதி சென்னை திருவான்மியூர்ராமச்சந்திரா…
சென்னை : விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் பெரிய எதிர்பார்புகளுக்கு மத்தியில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில்…
சென்னை : தமிழ்நாட்டில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் இன்று, அதாவது (ஏப்ரல் 1) முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. …
சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, இன்று, அதாவது 2025 ஏப்ரல் 1 அன்று, தமிழ்நாடு சட்டப்பேரவை மீண்டும்…