பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் தான் ஏன் புகைப்பிடிப்பதை நிறுத்தினார் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
ஷாஹித் 2015-ல் யூடியூப்பரான மீரா ராஜ்புத்தை திருணம் செய்து கொண்டார். ஷாஹித் மற்றும் மீரா ராஜ்புத் ஆகியோர் 2016-ல் தங்கள் முதல் குழந்தையான மகள் மிஷாவை வரவேற்று, பின்னர் அவர்கள் செப்டம்பர் 2018-ல் அவர்களது இரண்டாவது குழந்தையான மகன் ஜைனை வரவேற்றனர்.
தற்போது, இவரது மகள் மிஷாவுக்காக புகைபிடிப்பதை விட்டுவிட்டதாக கூறியுள்ளார். ஆம் சமீபத்தில், மாடல் அழகியான நேஹா துபியாவின் பிரபல அரட்டை நிகழ்ச்சியான ‘நோ ஃபில்டர் நேஹா’வில் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் இவர் பேசுகையில், “எப்போதும் எனது மகளுக்கு தெரியாமல் மறைந்திருந்தே புகைப்பிடிப்பேன். இதுவே அப்பழக்கத்தை நான் கைவிட முக்கிய காரணமாக இருந்தது. ஒருமுறை அவளுக்கு தெரியாமல் புகைக்கும்போது, எவ்வளவு நாள் இப்படியே இருப்போம், இனி வாழ்க்கையில் சிகரெட்டை தொடவே கூடாது என முடிவெடுத்தேன்” என்று உருக்கமாக கூறிஉள்ளார்.
தனது குழந்தைகளைப் பற்றி பேசுவது இது முதல் முறை அல்ல. பல நிகழ்ச்சியில் தனது குழந்தை குறித்து பேசியுள்ளார். ஷாஹித் கபூர் சமீபத்தில் அமித் ஜோஷி மற்றும் ஆராதனா சாவின் தெரி பாடன் மே உல்ஜா ஜியா படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.50 கோடியைத் தாண்டி வசூல் செய்துள்ளது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…