நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களுக்கு மத்திய பலத்த வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘வேலையில்லா பட்டதாரி”. இயக்குனர் வேல்ராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை அமலா பால் நடித்திருந்தார். படத்தில் சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், விவேக், சுர்பி, அமிதாஷ் பிரதான், சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கியான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். படத்தின் முதல் பாகம் பெரிய அளவில் வெற்றிபெற்ற நிலையில், படத்தினுடைய இரண்டாவது பாகம் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியானது. ஆனால், முதல் பாகம் அளவிற்கு இரண்டாவது பாகம் இல்லை என்ற காரணத்தால் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தோல்வியை தழுவியது.
இந்த திரைப்படம் உருவாக முக்கிய காரணமே, தனுஷ் மகன் தான். ஏனென்றால், அந்த சமயம் வி.ஐ.பி படத்தின் இரண்டாவது பாகத்தை தயாரிக்க தனுஷ் தான் திட்டமிட்டுருந்தார் வேறு எந்த தயாரிப்பு நிறுவனமும் முன் வரவில்லையாம். ஒரு முறை ரஜினியை சந்திக்க பிரபல தயாரிப்பாளரான கலைப்புலி தாணு அவருடைய வீட்டிற்கு சென்றாராம். அப்போது தனுஷின் மூத்த மகன் கலைப்புலி தாணுவிடம் பேசினாராம்.
அப்போது தனுஷின் மகன் எங்க தாத்தாவை வைத்து மட்டும் படம் எடுக்குறீங்க எங்க அப்பாவை வைத்து படம் எடுக்க மாட்டீங்களா? என்று கேட்டாராம். அதற்கு கலைப்புலி தாணு உங்க அப்பாவை தேதி கொடுக்க சொல்லுங்க படம் பண்ணிருவோம் என கூறினாராம். பிறகு கபாலி படத்தை தனுஷ் தயாரிக்கும்போது கபாலி 2 என்று தலைப்பு வாங்குவது பற்றி பேசுவதற்காக தனுஷை தாணு சந்தித்தாராம்.
சந்தித்து பேசும்போது தாராளமாக படத்தின் தலைப்பை எடுத்துக்கொள்ளுங்கள் சார் என்று கூறினாராம். பிறகு தனுஷ் நாம் எப்போது படம் பண்ணலாம்? என கேட்டாராம். அதற்கு தாணு உங்களுடைய மகன் என்னுடைய தந்தையை வைத்து எப்போது படம் செய்வீர்கள் என்று கேட்டான் நீங்களும் சரியாக கேட்கிறீர்கள் என்று கூறிவிட்டு நீங்ளே தேதி கொடுங்கள் என்று கூறினாராம்.
பிறகு தான் தனுஷ் வேலையில்லா பட்டதாரி 2 படத்தை தயாரிக்க தேதி கொடுத்துள்ளார். இந்த தகவலை கலைப்புலி தாணுவே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும், வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வசூலை செய்யவில்லை படம் தோல்வி அடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை : தவெக தலைவர் விஜய் தலைமையில் இன்று பனையூரில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில், பொதுச் செயலாளர் ஆனந்த் முன்னிலையில், தவெக செயற்குழு மற்றும்…
சென்னை : தென் கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
மும்பை : இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த மூன்று போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரை நியூசிலாந்து…
சென்னை : இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள 'கங்குவா' படம் சூர்யாவின் 42வது படமாகும். இப்படத்தில் சூர்யாவைத் தவிர,…
சென்னை : பனையூரில் நடைபெறும் தவெக செயற்குழு கூட்டம் முதல் நியூசிலாந்து VS இந்தியா மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி…