Saroja Devi : எம்ஜிஆரின் ஹிட் படம் ஒன்றில் நடிக்க சரோஜாதேவி மறுப்பு தெரிவித்த காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் நடித்துக்கொண்டு இருந்த காலகட்டத்தில் அவருடன் அதிகமான படங்களில் நடித்த நடிகைகளில் ஒருவர் சரோஜாதேவி. அந்த வகையில் எம்.ஜி.ஆருடன் எங்க வீட்டுப் பிள்ளை, நாடோடி மன்னன், நாடோடி மன்னன், படகோட்டி, நான் ஆணையிட்டால், பாசம், ஆசை முகம் இன்னும் சில படங்களும் நடித்து இருக்கிறார்.
அந்த சமயம் இவர்களுடைய ஜோடி ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்த காரணத்தால் எம்.ஜி ஆர் வைத்து படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களே படத்தில் சரோஜாதேவியை புக் செய்துவிடுவார்களாம். இதன் காரணமாகத்தான் தொடர்ச்சியாக எம் ஜி ஆர் படங்களில் சரோஜா தேவியும் நடித்துக் கொண்டிருந்தாராம்.
தயாரிப்பாளர்கள் மட்டுமின்றி எம்ஜிஆர் தன்னுடைய படங்களில் எல்லாம் சரோஜாதேவியை போட வேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் கூறியதாகவும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், எம்ஜிஆர் உடைய மிகப்பெரிய ஹிட் படங்களில் ஒன்றான வேட்டைக்காரன் படத்தில் சரோஜாதேவி நடிக்காதது அந்த சமயமே ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது . எந்த காரணத்துக்காக வேட்டைக்காரன் படத்தில் சரோஜாதேவி நடிக்கவில்லை என்ற காரணம் இதுவரை வெளியாகாமல் இருந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சரோஜாதேவி இதற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.
இது குறித்து பேசிய சரோஜாதேவி ” அந்த படத்தில் நடிக்க முதலில் எனக்கு தான் வாய்ப்பு வந்தது. ஆனால், அங்கு இருந்தவர்கள் உடனே எல்லா படத்திலையும் அவரையே போடாதீங்க என்று கூறினார்கள். ஒரு சிலர் சாவித்திரியை நடிக்க வையுங்கள் என்று கூறினார்கள். உடனே நானே சொன்னேன். ஆமாம் எனக்கு பதிலாக அவரை நடிக்க சொல்லுங்கள் எத்தனை முறை நானே நடிக்க என்று தான் அந்த படத்தில் நடிக்க மறுத்தேன்” எனவும் நடிகை சரோஜா தேவி தெரிவித்துள்ளார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…