simran chandramukhi [File Image ]
Simran : சந்திரமுகி படத்தில் நடிக்க சிம்ரன் மறுத்த உண்மையான காரணம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் எல்லாருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஒரு படத்தில் நடிக்கவேண்டும் என்பது கனவாக இருந்து வருகிறது. பல நடிகைகளுக்கு இந்த கனவு நிறைவேறினால் கூட ஒரு சில நடிகைகளுக்கு அவர்கள் பீக்கில் இருந்த சமயத்தில் நிறைவேறியது இல்லை என்றே கூறவேண்டும். அப்படி தான் நடிகை சிம்ரன்க்கும் கூட. சிம்ரன் முன்னணி நடிகையாக வளம் வந்த காலத்தில் ரஜினிக்கு ஜோடியாக தான் நடிக்க ஆசைபட்டாராம்.
அவருடைய ஆசை ‘பேட்ட’ படத்தின் மூலம் நிறைவேறியது. இருந்தாலும் ஆரம்ப காலத்தில் பீக்கில் இருந்த போது கிடைக்கவில்லையே என்ற வருத்தம் அவரிடம் இன்னுமே இருக்கிறதாம். இருப்பினும் ஆரம்ப காலத்தில் அதாவது ‘சந்திரமுகி’ படத்திலே சிம்ரனுக்கு ரஜினிகாந்துடன் நடிக்க வாய்ப்பு வந்ததாம். ஆனால், ரஜினிகாந்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்த கதாபாத்திரத்தில் இல்லை பிரபுவுக்கு ஜோடியாக ஜோதிகா நடித்த கதாபாத்திரத்தில் தான் சிம்ரனுக்கு நடிக்க வாய்ப்பு வந்தது.
இந்த படத்தில் சிம்ரன் நடிக்காத காரணம் சிம்ரன் திருமணம் செய்து கொண்டு கர்ப்பமாக இருந்தது என்ற தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது. ஆனால், உண்மையான காரணமே அது இல்லயாம். உண்மையான காரணமே ரஜினிகாந்த் படத்தில் நடித்தால் அவருக்கு ஜோடியாக மட்டுமே தான் நடிக்கவேண்டும் என்ற முடிவில் சிம்ரன் இருந்தாராம்.
சந்திரமுகி படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்ததும் அட டே ரஜினிக்கு ஜோடி இல்லையா அப்படி என்றால் படம் வேண்டாம் என்று தான் மறுத்துவிட்டாராம். கண்டிப்பாக நயன்தாரா நடித்த அந்த கதாபாத்திரத்தில் நடிக்க சிம்ரனுக்கு வாய்ப்பு வந்திருந்தால் கண்டிப்பாக அந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பாராம். இந்த தகவலை பிரபல பத்திரிக்கையாளரான செய்யாறு சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…