அஜித் கேட்ட அந்த கேள்வி…ரசிகர்கள் கலகல…வைரலாகும் வீடியோ!

Ajithkumar

Ajith kumar: முட்டாள்கள் நாளன்று வந்திருக்கிறீர்களே என்று நடிகர் அஜித் தனது ரசிகர்களை கிண்டல் செய்த வீடியோ இணையத்தில் வைரல்.

மகிழ் திருமேனி, அஜித் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கிய நிலையில், பல்வேறு காரணங்களால் இன்னும் நிறைவு பெறாமல் உள்ளது.

இதனிடையே, அஜித் தனது பட வேலைகளில் இருந்து சிறிய ஓய்வு எடுத்துக்கொண்டு பைக் பயணத்தை மேற்கொண்டுள்ளார். அஜித்தின் பைக் பயணத்தின் புகைப்படங்கள் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

அந்த வகையில், அஜித்தின் சமீபத்திய வீடியோ சமூக ஊடகங்களில் பரவலான கவனத்தை ஈர்த்து வருகிறது. அஜித்தின் பைக் பயணத்தின் போது பைக் ஓட்டுபவர்கள் குழு ஒன்று அஜித்தை சந்தித்தது.

அஜித்தை சந்தித்த ரசிகர்கள் அவரிடம் ஆட்டோகிராஃப் பெற்றனர். அப்போது, “சரியாக ஃபூல்ஸ் டே அன்னைக்கு வந்திருக்கீங்க” என்று அவர்களிடம் அஜித் கிண்டலாக கேட்டார். அஜித் சென்னை திரும்புவது போல் தெரிகிறது, இன்னும் சில நாட்களில் அவர் சொந்த ஊருக்கு வரவிருக்கிறார்.


இதற்கிடையில்,விடாமுயற்சி படத்திற்குப் பிறகு இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணையும் அவரது அடுத்த படமான ‘குட் பேட் அக்லி’ படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் என்றும், படம் 2025 ஆம் ஆண்டு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Ilayaraja Biopic
mp sudha anbumani
Jayalalithaa and pm modi
nzvsban
vidaamuyarchi ott release date
kaliyammal tvk