லியோ திரைப்படம் வெளிநாடுகளில் எவ்வளவு வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் லியோ. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். சஞ்சய் தத், மடோனா, கெளதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
இந்த திரைப்படத்தினை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்திருந்தது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். வெளியான நாளிலிருந்து தற்போது வரை இந்த திரைப்படம் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது. படத்திற்கு கிடைக்கும் வரவேற்பு போலவே படத்தின் வசூலும் குவிந்து வருகிறது.
குறிப்பாக இதுவரை படம் உலகம் முழுவதும் 602 கோடிகள் வசூல் செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால், படத்திற்கு இருக்கும் எதிர்பார்க்க வைத்து பார்க்கையில் படம் கண்டிப்பாக 700 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனைகளை படைக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் படத்தின் வசூல் அப்படியே குறைந்த காரணத்தினால் இதுவரை உலகம் முழுவதும் 600 கோடி வசூல் மட்டுமே செய்துள்ளது.
லியோ கொடுத்த பெரிய வெற்றி! மடோனாவுக்கு குவியும் பட வாய்ப்புகள்?
இந்த நிலையில், திரைப்படம் வெளிநாடுகளில் மட்டும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்பதை படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் வெளிநாடுகளில் மட்டும் இதுவரை 201 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் தமிழ் படம் 200 கோடி வசூல் செய்தது என்றால் அது சாதாரண விஷயமே இல்லை.
ஆனால், விஜயின் லியோ படம் வெளியான 1 மாதத்திற்குள்ளே 200 கோடிகளுக்கு மேல் வெளிநாடுகளில் மட்டும் வசூல் செய்துள்ளதால் கோலிவுட் திரையுலகமே விஜயின் மார்க்கெட்டை பார்த்து மிரண்டுள்ளது. இன்னும் படம் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டு இருப்பதால் வரும் நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
காளியம்மாள் போனால் போகட்டும்! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!
February 22, 2025
ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!
February 22, 2025
மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி பேச்சு!
February 22, 2025
நகை கொள்ளை பணத்தில் பிரியாணி கடை! ஞானசேகரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்…
February 22, 2025