விஜய் அஜித்தை அழைத்துள்ளளோம்…யாரையும் வற்புறுத்தவில்லை – தயாரிப்பாளர் சங்கம்.!

Karunanidhi - Vijay - Ajith

தமிழ் திரையுலகம் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது. அரசியலுக்கு அப்பாற்பட்டு, மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தனது எழுத்து மற்றும் வசனங்களால் பல திரைப்படங்களுக்கு உயிர் கொடுத்தவர்.

இந்நிலையில், அவரை சிறப்பிக்கும் வகையில், இந்த பிரம்மாண்ட விழாவுக்கு நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட 24 சங்கங்கள் ஏற்பாடு செய்துள்ளன. இந்த விழாவானது சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில், டிசம்பர் 24ம் தேதி இவ்விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

இந்த விழாவுக்கு இந்திய முன்னணி நடிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆம், இந்த விழாவில் பங்கேற்க ஏற்கனவே ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அமிதாப் பச்சன், மோகன் லால், சிவராஜ் குமார், சிரஞ்சீவி உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், தமிழ் திரையுலகம் சார்பாக நடைபெறவுள்ள ‘கலைஞர் நூற்றாண்டு’ விழாவில் நடிகர்கள் விஜய், அஜித் வருவார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது என தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தேனாண்டாள் முரளி பேட்டியளித்துள்ளார்.

இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், என்.ராமசாமி, செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி முருகன், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு விழா குறித்த பல்வேறு விசயங்களை பகிர்ந்து கொண்டனர்.

கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்…தனுஷ் குரலில் மிரட்ட வரும் முதல் பாடல்.!

இதில், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தேனாண்டாள் முரளி பேசுகையில், நாங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுப்போம். இதனால், விஜய், அஜித் இருவரும் வருவார்கள் என்று நம்பிக்கை உள்ளது. எங்களின் கடமை அனைவரையும் அழைப்பதுதான், யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை என கூறியுள்ளார்.

மேலும், கலைஞர் 100 விழா நடைபெறுவதை முன்னிட்டு, டிசம்பர் 23 மற்றும் 24 ஆகிய இரண்டு நாட்கள் தமிழ்நாடு முழுவதும் படப்பிடிப்புகள் உட்பட திரை உலக வேலைகள் எதுவும் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய திரையுலகமே பங்கேற்கும் ‘கலைஞர் 100’ விழா….அதிர போகும் சென்னை!

பல ஆண்டுகளுக்குப் பிறகு 24 சங்கங்கள் சார்பில் இதுபோன்ற நிகழ்ச்சி நடைபெறுவது பலரது ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இந்த விழாவில் விஜய், அஜித் கலந்து கொண்டார்கள் என்றால், விழா மேலும் சிறப்பாக மாறக்கூடும் என தெரிகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்