தெலுங்கு சினிமாவில் பல பெரிய ஹிட் படங்களை தயாரித்து முன்னணி தயாரிப்பாளராக இருக்கும் தில்.ராஜு தமிழும் பெரிய பெரிய படங்களை தயாரிக்க ஆரம்பித்துவிட்டார். குறிப்பாக சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தை தில் ராஜு தான் தயாரித்திருந்தார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாக பெரிய ஹிட் ஆனது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்து வரும் RC15 திரைப்படத்தை தில் ராஜு தான் தயாரித்து வருகிறார். இதற்கிடையில். அவர் மீண்டும் தமிழ் திரைப்படம் ஒன்றை தயாரிக்கவுள்ளாராம். அந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.
சம்பளமாக வெற்றிமாறனுக்கு 5 கோடி கொடுக்கப்பட்டு எப்போது வேண்டுமானாலும் நீங்கள் படம் பண்ணி கொடுக்கலாம் என்றும், படத்தில் யார் வேண்டுமானாலும் ஹீரோவாக நடிக்கலாம் என்றும் முழு சுதந்திரம் வெற்றிமாறனுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாம். மேலும் வெற்றிமாறன் தற்போது விடுதலை திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இந்த திரைப்படத்திற்கான படப்பிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார். எனவே வாடிவாசல் படத்தை முடித்த பிறகு தில் ராஜு தயாரிக்கும் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : தனுஷ் இயக்கி இருக்கும் "நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் " திரைப்படம் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி…
டெல்லி : 2025- 26 ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது தொடங்கி எப்போது முடியும் என்கிற தகவல் தற்போது…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் இளம் வீரரான (27) ரிங்கு சிங் விரைவில் திருமணம் செய்துகொண்டு…
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில்…
சென்னை : இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த திருமால்பூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள்…
மும்பை : ஆஸ்ரேலியாவுக்கு எதிராக நடந்து முடிந்த பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய அணி தோல்வியடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில்…