சந்தோஷ் நாராயணன் : பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் படத்தின் முதல் பாடல் நேற்று வெளியான நிலையில், அந்த பாடலுக்கு நான் இசைமைக்கவில்லை என்று சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான திரைப்படமான ‘அந்தாதுன்’ படத்தின் தமிழ் ரீமேக் தான் ‘அந்தகன்’. இந்த படத்தில் பிரசாந்த் , சிம்ரன் பிரியா ஆனந்த், மனோபாலா, லீலா சாம்சன், சமுத்திரக்கனி, யோகி பாபு, வனிதா விஜயகுமார், கார்த்திக், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
இந்த படம் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் காரணத்தால் படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக படத்தில் இருந்து முதல் பாடலான ‘அந்தகன் கீதம்’ பாடல் நேற்று வெளியானது. இந்த பாடலை அனிருத் பாடியிருந்தார். பாடலை நடிகர் விஜய் ரிலீஸ் செய்து கொடுத்தார்.
முன்னதாகவே இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. நேற்று வெளியான பாடலில் கூட இசையமைத்தது சந்தோஷ் நாராயணன் தான் எனவும் குறிப்பிடபட்டு இருந்தது. பாடலை கேட்டுவிட்டு சந்தோஷ் நாராயணன் இசை போல இல்லையே என்பது போல பலரும் கருத்துக்களையும் தெரிவித்து இருந்தார்கள்
இதனையடுத்து, அந்த பாடலுக்கு நான் இசையமைக்கவில்லை என்பது போல தனது சமூக வலைதள பக்கங்களில் அறிவித்துள்ளார். இது குறித்து பதிவிட்டுள்ள அவர் ” வரலாற்றில் முதன்முறையாக, ஆடியோ லேபிளும் ஒரு குருட்டு கதாபாத்திரத்தில் நடிக்கிறது. FYI உண்மையான இசை, பாடல், அமைப்பு,மிக்ஸ் மாஸ்டர் உண்மையில் என்னுடையதா? என்பதைச் சரிபார்க்க நான் கட்டணம் வசூலிப்பதில்லை” என பதிவிட்டுள்ளார்.
மற்றோரு பதிவில் “இது நான் வழங்கிய இசை, பாடல், ஏற்பாடு, கலவை மற்றும் மாஸ்டர் அல்ல” என பதிவிட்டுள்ளார். இவருடைய பதிவு ஒரு பக்கம் வைரலாகி வரும் நிலையில், மற்றோரு பக்கம் அந்தகன் ஆன்தம்’ பாடல் விளம்பரத்திலோ அல்லது பாடல் வெளியீட்டு நிகழ்விலோ இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பெயரை படக்குழு எங்குமே பயன்படுத்தவில்லை. இது திட்டமிட்ட புறக்கணிப்பா அல்லது கவனக்குறைவா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…