Kamal Haasan : காதல் இளவரசன் கமல்ஹாசன் தான்! கசிந்த பர்ஸ்ட் லவ் சீக்ரெட்!

kamal haasan

நடிகர் கமல்ஹாசன்  காதல் சீக்ரெட்ஸ் பற்றியும் ஒரு சில பத்திரிகையாளர்களும் வெளிப்படையாகவே பேசுவது உண்டு.  குறிப்பாக நடிகரும் சினிமா விமர்சகருமான  பயில்வான் ரங்கநாதன் பலமுறை கமல்ஹாசன் இந்த நடிகைகளை காதலித்தார் என வெளிப்படையாகவே பேசியது உண்டு. இந்நிலையில், கமல்ஹாசன் முதன்முதலாக காதலித்தது நடிகை ஸ்ரீவித்யாவை தானாம்.

முதலில் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு கமல்ஹாசன்  நடன இயக்குனர் தங்கப்பனிடம் உதவியாளராக இருந்துள்ளாராம். அந்த சமயம் அவருடைய லட்சியமே தான் ஒரு நடன இயக்குனராக மாற வேண்டும் என்பதுதான். சினிமாவிற்குள் வந்து படங்களில் நடிக்க வேண்டும் இயக்க வேண்டும் என்ற எந்த  ஆசையும் அவருக்கு அப்போது இல்லையாம்.

பிறகு அந்த லட்சியத்தை அப்படியே மாத்தியவர் உதவ இயக்குனர் சக்தி என்பவர் தானாம்.  கமல்ஹாசனை குணசீலன் எனும் திரைப்படத்தில் நடிகனாக அறிமுகப்படுத்தினாராம். அந்த சமயமே கமல்ஹாசன் மிகவும் துடிப்பாக இருப்பாராம். இதனால் கமல்ஹாசன் மீது பல நடிகைகள் விருப்பப்பட்டார்களாம்.

அந்த வகையில் பிரபல நடிகையான தீபா கமல்ஹாசனை காதலித்தாராம்.  ஆனால் முதல் காதல் ஸ்ரீவித்யா தானம்.  ஸ்ரீவித்யாவை கமலஹாசன் காதலித்ததாகவும், ஸ்ரீவித்யாவும் கமல்ஹாசனை மிகவும் தீவிரமாக காதலித்ததாகவும் கூறப்படுகிறது. பிறகு எதோ சில காரணங்களால் கமல்ஹாசன் அப்படியே நழுவிவிட்டாராம்.

ஸ்ரீவித்யா இறப்பதற்கு முந்திய காலகட்டத்தில் கடைசியாக ஆசைப்பட்டது கமல்ஹாசனை திருமணம் செய்யவேண்டும் என்பது தானம். ஆனால், அது நடக்காமலே இறந்துவிட்டாராம். இந்த சீக்ரெட்டான தகவலை பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அது மட்டுமின்றி கமல்ஹாசனை காதல் இளவரசன் எனவும் விமர்சித்துள்ளார். மேலும், நடிகை ஸ்ரீவித்யா கடந்த 1976-ஆம் ஆண்டு ஜார்ஜ் தாமஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார் பிறகு 1980-ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்