வருகின்ற மார்ச் மாதம் கோலிவுட் சினிமாவில் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இரண்டு படங்களுக்கான இசை வெளியீட்டு விழா அடுத்தடுத்த வாரத்தில் நடைபெறவுள்ளது. அந்த இரண்டு படங்கள் எந்த படங்கள் என்றால் பொன்னியின் செல்வன் மற்றும் பத்து தல ஆகிய 2 படங்கள் தான்.
1.பொன்னியின் செல்வன் 2
இயக்குனர் மணிரத்தனம் இயக்கத்தில் பிரமாண்ட பட்ஜெட்டில் 2 பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இதில் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது என்றே கூறலாம்.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகம் விறு விறுப்பாக தயாராகி வருகிறது. முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் அருமையாக இருக்கவேண்டும் என்ற காரணத்தால் படக்குழு ஒவ்வொரு காட்சிகளையும் பார்த்து பார்த்து எடிட் செய்து வருகிறார்கள். பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதனை முன்னிட்டு பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா டிரெய்லர் வெளியீட்டு விழா மார்ச்- 29 ஆம் தேதி நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளதாம். முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், சந்தோஷ் நாராயணன், யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்தார்கள். எனவே இந்த இரண்டாவது பாகத்திற்கான இசை வெளியீட்டு விழாவிற்கும் பலர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
2.பத்து தல
நடிகர் சிம்பு தற்போது இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் “பத்து தல”. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக் ப்ரியா பவானி சங்கர் என பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
ஏற்கனவே சிம்பு பிறந்த நாளை முன்னிட்டு படத்திற்கான முதல் பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 18-ஆம் தேதி நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளதாம். படம் மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…