Vignesh Shivan: இயக்குனர் விக்னேஷ் சிவன், தனது குழந்தைகளையும் மனைவி நயன்தாராவையும் அரவணைக்க காத்திருக்க முடியாது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
அன்புக்குரிய தம்பதிகளான நயன்-விக்கி ஆகியோர் தனது வேலைகளில் பிஸியாக இருந்தாலும், குழந்தை பிறந்த நாளில் இருந்து தங்கள் இரட்டை மகன்களுடன் கடக்கும் அழகான தருணங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
VigneshShiva – Uyir -Ulag [File Image ]விக்னேஷ் சிவன் தற்பொழுது பிரதீப் ரங்கநாதன் முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’ படத்தில் பிஸியாக இருக்கிறார். இப்படத்தில் கிருத்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் நடைபெற்று வந்ததாக தெரிகிறது. இப்பொது படப்பிடிப்பை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய விக்னேஷ் சிவன், இவ்ளோ நாள் தனது குழைந்தைகள் தரும் நயன்தாராவை பிறந்திருந்த தருணத்தை பகிர்ந்து கொண்டார்.
VigneshShiva – Uyir -Ulag [File Image ]இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில், “சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் ஒரு மறக்க முடியாத படப்பிடிப்பு அனுபவத்திற்கு பிறகு எனது உயிர் மற்றும் உலகத்தை காண வீடு திரும்புகிறேன். பல வாரங்களாக வீட்டில் காத்திருக்கும் அன்பை ஏற்க இனியும் காத்திருக்க முடியாது” என பதிவிட்டுள்ளார்.
VigneshShiva – Uyir -Ulag [File Image ]இதற்கிடையில், நயன்தாரா ‘டெஸ்ட்’ மற்றும் ‘மன்னாங்கட்டி சின்ஸ் 1960’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார், அவர் கடைசியாக ‘அன்னபூரணி’ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.