நடிகை ராதிகா ஆப்தே தமிழ் சினிமாவில் கபாலி,ஆல் இன் ஆல் அழகுராஜா , சித்திரம் பேசுதடி-2, உள்ளிட்ட படங்களில் நடித்தவர். இவர் தமிழையும் தாண்டி பல மொழிகளில் பல படங்களிளில் நடித்துள்ளார். அடிக்கடி தனது மனதில் தோன்றும் கருத்துக்களை வெளிப்படையாக தைரியமாக இவர் தெரிவித்து விடுவார்.
அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் “பெண்களின் உடலை பற்றி விமர்சிப்பதை சிலர் அவர்களின் உரிமையாகவே கருதுவார்கள்” என பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் ” என்னுடைய உடல் எடை 3-4 கிலோ அதிகரித்ததால், பட வாய்ப்புகளை இழந்தேன்.
நான் பாலிவுட்டில் எனது திரைப்பயணத்தை தொடங்கியபோது, என் மூக்கின் அமைப்பு சரியாக இல்லை. எனது மார்பகங்கள் பெரிதாக இல்லை என விமர்சித்தார்கள். பெண்களின் உடலை பற்றி விமர்சிப்பதை சிலர் அவர்களின் உரிமையாகவே கருதுவார்கள். இது தவறு” என கூறியுள்ளார்.
மேலும். இதைப்போலவே முன்னதாக ஒரு பேட்டியில் ராதிகா ஆப்தே” சினிமாவில் பணியாற்றும் நடிகர்களுக்கு இணையாக நடிகைகளுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும். பெயர், புகழ் என அனைத்திலும் சம உரிமை வழங்கப்பட வேண்டும்” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தேசிய தேர்வு முகமை கடந்த ஆண்டு இறுதியில் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே, மத்திய அரசு நிதி சரியாக வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில்,…
சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…
சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த…
ஜப்பான் : தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 6.8 என்ற ரிக்டர்…
நியூ யார்க : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்க போகிறார். அந்த…