பிகில் அடிச்சாத்தான் சத்தம் வரும்! ஆனா விஜய் நடிச்சாலே..! தனது பாணியில் வாழ்த்து தெரிவித்த பார்த்திபன்!
நடிகர் பார்த்திபன் பிரபலமான, நடிகர் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவர் தமிழில் முதன்முதலாக, ராணுவ வீரன் என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது ஒத்தசெருப்பு என்ற திரைப்படத்தை, பார்த்திபன் நடித்தும், இயக்கியும், தயாரித்தும் இருக்கிறார்.
இந்நிலையில், நடிகர் விஜயின் பிகிளிசை இசை வெளியிட்டு விழாவுக்கு தனது பாணியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள பதிவில், ”பிகில்’ அடிச்சாதான் சத்தம் வரும், விஜய் நடிச்சாலே…. ரசிகர்கள் அடிக்கும் பிகில் சத்தம் சந்திரனை எட்டி, சந்திரயானை மீண்டும் இயங்கச் செய்யும்! Audio launch -க்கு வாழ்த்துக்கள்! மகிழ்ச்சியா நண்பர்களே?’ என பதிவிட்டுள்ளார்.
‘பிகில்’ அடிச்சாதான் சத்தம் வரும்,
விஜய் நடிச்சாலே….
ரசிகர்கள் அடிக்கும் பிகில் சத்தம்
சந்திரனை எட்டி, சந்திரயானை மீண்டும் இயங்கச் செய்யும்!
Audio launch -க்கு வாழ்த்துக்கள்!
மகிழ்ச்சியா நண்பர்களே? pic.twitter.com/kbeBm47t45— R.Parthiban (@rparthiepan) September 19, 2019