அடுத்த வருடம் சிம்பு ரசிகர்களுக்கு செம்ம விருந்து : சுரேஷ் காமாட்சி
நடிகர் சிம்பு சுந்தர்.சி இயக்கத்தில் வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படத்தை நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்கவுள்ளார்.
மாநாடு படத்தின் படப்பிடிப்பு வேலைகள் சிம்புவின் பிறந்தநாள் அன்று துவங்கவுள்ளது. இந்நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் மாநாடு படத்தின் கதையை கூறியுள்ளனர். கதையை கேட்ட காமாட்சி சிம்பு ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு சிறப்பு விருந்தாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் சிம்புவின் திரைப்பயணத்தில் மாநாடு படம் ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்றும், அடுத்த ஆண்டு நம்மினுடையது, புத்தாண்டு வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.