கான்ஜுரிங் பட வரிசையில் அடுத்த பேய் படம் அனபெல்லா கம்ஸ் ஹோம்!
பேய் படங்கள் என்றாலே ஹாலிவுட் படங்கள் தான்.பேய் வரும் ஒவ்வொரு நிமிடமும் இதயம் அப்படியே ஒரு நிமிடம் நிற்பது போல் இருக்கும்.அந்த வகையில் தி கான்ஜுரிங் திரைப்படம் அனைவரையும் ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தது.
அதனை தொடர்ந்து பொம்மையை மையமாக வைத்து அனபெல்லா படம் திரைக்கு வந்தது.இந்த படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில் அனபெல்லா கம்ஸ் ஹோம் நியூ லைன் சினிமா தயாரிப்பில் வார்னர் பிரதர்ஸ் வருகிற ஜூன் 26-ம் தேதி திரைக்கு வர உள்ளது.இந்த படத்திற்கு அனபெல்லா முதல் பாகத்தை இயக்கிய கேரி டாபர்மேன் இயக்கியுள்ளார்.
இந்த படம் ஜூன் 6-ம் தேதி இந்தியாவில் தமிழ்,ஹிந்தி போன்ற பல்வேறு மொழிகளில் வெளியிடப்படுகிறது.