சாய் பல்லவி பெயரில் பண மோசடி? வழக்கு தொடர்ந்ததா ‘RBI’? உண்மை இதோ!!
Sai Pallavi : சினிமாத்துறையில் இருக்கும் நடிகைகள் பற்றி வதந்தியான தகவல் பரவுவது ஒன்றும் புதிய விஷயம் இல்லை. அப்படி தான் நடிகை சாய்பல்லவி குறித்து வதந்தியான ஒரு தகவல் பரவி கொண்டு இருக்கிறது. அது என்னவென்றால், கார்கி திரைப்படம் வெளியான சமயத்தில் சன் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ப்ரோமோஷனுக்காக கடந்த 2022, ஜூலை 13ம் தேதி கலந்துகொண்டார்.
READ MORE – இளையராஜாவாக நடிக்க தனுஷ் கேட்ட சம்பளம்? அதிர்ந்து போன கோலிவுட் வட்டாரம்!!
அப்போது அந்த நிகழ்ச்சியில் சாய் பல்லவி பணம் சம்பாதிப்பதற்கான வழிகளுக்கு முதலீடு செய்யும் வகையில் ஒரு விஷயத்தை கூறியதாகவும், அதன் மூலம் தான் அவர் பணங்கள் சம்பாதித்து வருவதாகவும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளரிடம் கூறியதாகவும் செய்திகள் வெளியானது. இதனால் ரிசர்வ் வங்கி அவர் மீது வழக்கு தொடர்வதாகவும் செய்திகள் பரவியது. சாய் பல்லவி பணம் முதலீடு செய்வதாக தகவல் பிரபல பத்திரிக்கையின் பெயர் ஒன்றின் மூலம் வெளியே வந்தது.
READ MORE – கணவர் கூட போனாலே ஏதாவது சொல்றாங்க! நடிகை ஸ்ரேயா சரண் வேதனை!
அந்த பத்திரிக்கை பெரிய பத்திரிக்கை நிறுவனம் என்பதாலும், சாய் பல்லவி அப்படி கூறியிருக்கிறார் என்றவுடன் பலரும் நம்பவும் ஆரம்பித்தனர். ஆனால், உண்மை என்னவென்றால், இது முற்றிலுமான வதந்தி. ஏனென்றால், பணம் மோசடி செய்யும் கும்பல் ஒன்று அந்த பத்திரிக்கை நிறுவனத்தின் பெயரை வைத்து போலியான தளம் ஒன்றை உருவாக்கி சாய் பல்லவி கூறியதாக பணம் மோசடி செய்து வருகிறார்கள்.
READ MORE – நாளை வெள்ளித்திரையில் களமிறங்க போகும் சிறிய பட்ஜெட் திரைப்படங்கள்.!
அந்த பெரிய பத்திரிக்கை நிறுவனத்தில் சாய் பல்லவி பணம் சம்பாதிக்க வழிமுறைகள் கூறியதாக எழுதி மோசடி செய்யும் போலியான அவர்களுடைய லிங்கை உள்ளே வைத்து அதன் வழியாக மக்களை வரவழைத்து பண மோசடி செய்து வருகிறார்கள். சாய் பல்லவியின் பெயரை பயன்படுத்தினால் மக்கள் நம்புவார்கள் என இப்படியான மோசமான செயலை அந்த மோசடி கும்பல் செய்து வருகிறது.
அந்த பத்திரிகையிலும் சரி, சாய் பல்லவி கொடுத்த பேட்டியிலும் சரி இப்படியான எந்த விஷயமும் சாய் பல்லவி கூறவில்லை. இதன் மூலம் இது வதந்தி என்றும் ரிசர்வ் வங்கி அவர் மீது வழக்கு தொடர்வதாகவும் செய்திகள் போலி என்றும் இது முழுக்க முழுக்க பண மோசடி செய்யும் கும்பல் உருவாக்கியது எனவும் தெரிய வந்துள்ளது.
எனவே இதுபோன்ற செய்திகள் வந்தால் அதனை முற்றிலும் நம்பவேண்டாம். மேலும் சாய் பல்லவி கூறியிருப்பதாக சொல்லி அதில் கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கிற்கு சென்று யாரும் முதலீடு செய்யவும் வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.