Thalaivar 171 poster: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 171’ படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
ரஜினி நடிக்கும் “தலைவர் 171” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘தலைவர் 171’ படத்தை அனிருத் இசையமைக்க லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்குகிறார்.
ரஜினிக்காக ஒன்றரை வருடமாக எழுதப்பட்ட இந்தக் கதையில், இதுவரை பார்த்திராத ரஜினியை பார்ப்போம் என சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். அதற்கேற்றவாறு, படத்தின் போஸ்டர் அமைந்திருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தலைவர் 171 அப்டேட் இன்று வெளியாகிறது என எந்தவித அறிவிப்புமின்றி, திடீரென போஸ்டரை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம், இந்தப் படத்தின் டைட்டில் ஏப்ரல் 22 அன்று வெளியாகவுள்ளது என குறிப்பிட்டுள்ளது.
போஸ்டரில் ரஜினியின் லுக்கை வைத்து பார்க்கும் பொழுது, ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2020ம் ஆண்டு வெளியான தர்பார் திரைப்பட லுக்கில் இருப்பதாக தெரிகிறது. இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றே சொல்லாம்.
மேலும், இந்த திரைப்படம் ஒரு தனித்துவமான படமாக இருக்கும் என்றும் அவரது LCU -ன் பகுதியாக இருக்காது என்றும் லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே தெரிவித்திருக்கிறார். படத்துக்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடந்து வருவதாகவும், படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்கும் என தெரிகிறது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…