புதிய அவதாரம் எடுக்கும் தளபதி விஜயின் கில்லி..!!!
- தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.
- புதிய அவதாரம் எடுக்கும் தளபதி விஜயின் கில்லி.
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்களுக்கு எப்பொழுதுமே மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும்.
இந்நிலையில், நடிகர் விஜய் நடிப்பில் 2014 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனா கில்லி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தினை அவரது ரசிகர்கள் மீண்டும் திரையிட சொல்லுவதாக கூறப்படுகிறது.
இது குறித்து ரோகினி தியேட்டர் உரிமையாளர் கூறுகையில், கில்லி திரைப்படம் இன்னும் டிஜிட்டலாக மாற்றப்படவில்லை. அது மட்டும் நடந்து விட்டால் ரோகிணியில் உள்ள 6 ஸ்கிரீனிலும் கில்லி தான் ரிலீசாகும் என கூறியுள்ளார்.
மேலும், கில்லி படத்தை டிஜிட்டலுக்கு மாற்றி அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியிடும் வேலைகளும் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது..