சினிமா

மன்சூர்அலிகான் சர்ச்சை பேச்சு : வழக்கு பதிவு செய்ய டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு!

Published by
பால முருகன்

நடிகர் மன்சூர் அலிகான் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் “ஆரம்ப காலகட்டத்தில் படங்களில் நடிக்க கூப்பிட்டால் கதாநாயகியை ரேப் செய்வது போல காட்சிகள் இருக்கும். அதைப்போலவே, லியோ படத்தில் லோகேஷ் அழைத்தவுடன் நடிகை திரிஷா என்றவுடன் அதுபோல காட்சி இருக்கும் என நினைத்தேன் ஆனால் அப்படி இல்லை” என பேசியிருந்தார்.

இவர் இப்படி பேசியதற்கு த்ரிஷா ” மன்சூர் அலிகான் பேச்சு மிகவும் கொச்சையாக இருக்கிறது அதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இது அவரது பாலியல், அவமரியாதை, பெண் வெறுப்பு மற்றும் மோசமான எண்ணத்தை காட்டுகிறது. இனிமேல் நான் அவருடன் இணைந்து படம் நடிக்கவே மாட்டேன்” என கூறியிருந்தார்.

த்ரிஷா பற்றி மன்சூர் அலிகான் இப்படி பேசியதற்கு லோகேஷ், கார்த்திக் சுப்புராஜ், மஞ்சிமா மோகன், மாளவிகா மோகனன், சின்மயி, குஷ்பூ என பல பிரபலங்கள்  தங்களுடைய கண்டனங்களை தெரிவித்தனர். மேலும் குஷ்பூ மன்சூர் அலிகான் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்து இருந்தார். அதைப்போல, பாஜக எம்.எல்.ஏ வானதி சினிவாசனும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்” என கண்டனத்தை தெரிவித்து இருந்தார்.

த்ரிஷா – மன்சூர் அலிகான் விவகாரம்: கண்டனம் தெரிவித்த பிரபலங்கள்!

இந்த நிலையில், த்ரிஷா பற்றி ஆபாசமாக பேசிய மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என மகளிர் ஆணையம் கூறியுள்ளது. அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தேசிய மகளிர் ஆணையம்  தமிழக டிஜிபிக்கு பரிந்துரை செய்துள்ளது. த்ரிஷா பற்றி ஆபாசமாக  மன்சூர் அலிகான் பேசியதற்கு புகார் எழுந்த நிலையில்,  தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து மன்சூர் அலிகான் மீது சட்டப்பிரிவு 509ன் கீழ் மற்றும் இதர தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மன்சூர் அலிகான் ” பழைய படங்கள் மாதிரி கதாநாயகிகள் கூட நடிக்க வாய்ப்பு இதுல இல்ல. ஆதங்கத்த காமெடியா சொல்லிருப்பேன். அத கட் பண்ணி திரிஷாட்ட தப்பா கட் பண்ணி காமிச்சு கோபப்பட வச்சுருக்காங்கண்ணு தெரியுது உலகத்துல எத்தனயோ பிரச்சின இருக்குபொழப்ப பாருங்கப்பா” என்பது போல கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

வெற்றி யாருக்கு.? மும்பை அணி பௌலிங் தேர்வு.., பேட்டிங் செய்யும் ஹைதராபாத்.!

மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…

2 hours ago

ரேஸிங்கில் தீவிரம் காட்டும் அஜித் குமார்.! தீவிர பயிற்சி வீடியோ…,

பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…

2 hours ago

பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!

சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…

3 hours ago

வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. மேலும்,…

4 hours ago

நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…

4 hours ago

உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!

டெல்லி :  உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…

5 hours ago