லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில், போன்ற பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “விக்ரம்”. இந்த படத்தை பார்க்க ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு நேற்று இந்த படத்தில் இசை வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில் ட்ரெய்லரும் வெளியிடபட்டது.
இந்த இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சிலம்பரசன், லோகேஷ் கனகராஜ், உதயநிதி ஸ்டாலின், அனிருத், பா.ரஞ்சித் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விஜய், ரஜினி கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், இருவரும் கலந்து கொள்ளவில்லை.
இதனை தொடர்ந்து விஜய் நிகழ்ச்சிக்கு வரவில்லை ஆனால், விஜயின் பெயரை கூறியவுடன் அரங்கமே அதிர்ந்த சம்வபம் தான் நடந்துள்ளது. ஆம், நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி தொடக்கத்தில் லோகேஷ் கனகராஜ் பற்றி பேசும் போது முதல் படம் மாநகரம், இரண்டாம் படம் கைதி, மூன்றாவது தளபதி விஜய் நடித்த மாஸ்டர் என்று கூறியவுடன் கூறியவுடன் ரசிகர்கள் அனைவரும் சத்தமாக கத்தினார்கள். 2 நிமிடம் சத்தம் நிக்கவில்லை இதனால் அனைவரும் அமைதியாக இருக்கா கூறுவது போல கமல்ஹாசன் கையை அசைத்தார்.
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…