இசை ஞானியை கேலி செய்தார்!!!!கங்கை அமரன்!!!!
இசை அமைப்பாளர் இளையராஜா சென்னையில் உள்ள
ராணி மேரி கல்லூரியில் தனது 75-வது பிறந்த நாளை கொண்டாடினர்.தமிழகத்தில் உள்ள பல கல்லூரிகளுக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார். இந்த விழாவில் இளையராஜா பல பாடல்களை பாடினார்.மேலும் தன்னுடைய அனுபவங்களை பற்றியும் பேசினார்.மேலும் பல மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடினார்.
சென்னை ராணி மேரி கல்லூரியில் இளையராஜா தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.அப்போது அவர் பேசுகையில் “இன்றைய சூழலில் இசையமைப்பாளர்களே இல்லை.படத்தின் சூழலுக்கு ஏற்ப எனக்கு இசை வரும், வேறு யாருக்கும் இவ்வாறு வராது”,என்று கூறினார்.இது பெரும் சர்ச்சையாக பேசப்பட்டது.பின்பு அவர் பேசிய முழு வீடியோ வெளியானது.பின்பு அவர் மேல் தவறு இல்லை என்பது தெரிய வந்தது.
அவரின் சகோதரர் கங்கைஅமரன் ’மன்னிக்கவும், நானெல்லாம் மறுபடியும் இசையமைக்க வர முடியாது’ என்று இளைய ராஜாவை கேலி செய்யும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார்.இந்த பதிப்பால் ரசிகர்கள் பலரும் கடும் விமர்சனங்களை தெரிவித்தனர் .
பின்பு இந்த விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் ‘நானாவது அண்ணனை மிஞ்சுவதாவது. நானும் அண்ணனும் இப்படி தான் அடிக்கடி கிண்டல் செய்து பேசிக்கொள்வோம்.”என்று கூறியுள்ளார் .மேலும் அண்ணன் எனக்கு அம்மா என்று கூறியுள்ளார்.