இன்று முதல் ஏஜிஆர் ஆட்டம்.! ஓடிடியில் வெளியானது ‘பத்து தல’ திரைப்படம்…
இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பத்து தல திரைப்படம் கடந்த மார்ச் 30-ஆம் தேதி 1,200 திரையரங்குகளில் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. கன்னடத்தில் வெளியான ‘முஃப்தி’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘பத்து தல’ படம் வெளியன் 5 நாளில் உலகளவில் இப்படம் ரூ.50 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்தது.
தற்போது, திரையரங்குகளில் வெளியாகி ஒரே மாதத்தில் பிரபல ஓடிடி தளமான அமேசன் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது. இது குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது, இதனால் ரசிகர்கள் உற்சாகமாக கண்டு மகிழ்ந்து வருகிறார்கள்.
buckle up to witness the ultimate action-packed battle between the good and evil ????#PathuThalaOnPrime, watch nowhttps://t.co/JP0Z2ZGaKp pic.twitter.com/t92FbRg9Wm
— prime video IN (@PrimeVideoIN) April 27, 2023
பத்து தல
இயக்குனர் ஒபேலி கிருஷ்ணா இயக்கிய, ‘பத்து தல’ படத்தில் நடிகர் சிம்பு ஏஜிஆர் என்ற கேங்ஸ்டாராக நடிக்கிறார். மேலும், கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கவுதம் மேனன் மற்றும் கலையரசன் ஆகியோர் அந்தந்த துணை வேடங்களில் நடித்துள்ளனர்.