நடிகர் சிம்பு நடித்த ‘பத்து தல’ திரைப்படம் கடந்த மாதம் 30ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது. வெளியான முதல் நாளிலேயே பார்வையாளர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்று, ‘பத்து தல’ திரைப்படம் இன்றுடன் 6வது நாளாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த சமீபத்திய தகவலின்படி, 5 நாளில் உலகளவில் இப்படம் ரூ.50 கோடிகளை நெருங்கியது என கூறப்படுகிறது. கன்னடத்தில் வெளியான ‘முஃப்தி’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘பத்து தல’ படம் வெற்றி ரீமேக் போல் தெரிகிறது. ஆனால், படக்குழு இதுகுறித்து படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை, விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை இப்படம் ரூ.48 கோடி வசூல் செய்திருக்கும் நிலையில்,6-வது நாளான இன்று ரூ.50 கோடி ரூபாய் வசூலை தாண்டி சிலம்பரசன் நடிப்பில் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக உருவாக உள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் மட்டும் இப்படம் சுமார் 30 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகவும், மற்ற இடங்களை ஒப்பிடும் போது, சொந்த மாநிலத்தில் படத்தின் வசூல் நன்றாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இயக்குனர் ஒபேலி கிருஷ்ணா இயக்கிய, ‘பத்து தல’ படத்தில் நடிகர் சிம்பு ஏஜிஆர் என்ற கேங்ஸ்டாராக நடிக்கிறார். மேலும், கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கவுதம் மேனன் மற்றும் கலையரசன் ஆகியோர் அந்தந்த துணை வேடங்களில் நடித்துள்ளனர்.
சென்னை : தேசிய தேர்வு முகமை கடந்த ஆண்டு இறுதியில் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே, மத்திய அரசு நிதி சரியாக வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில்,…
சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…
சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த…
ஜப்பான் : தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 6.8 என்ற ரிக்டர்…
நியூ யார்க : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்க போகிறார். அந்த…