குட் பேட் அக்லி படத்தில் எமோஷனல் இருக்கு! ரசிகர்கள் தலையில் குண்டை தூக்கிப்போட்ட ஆதிக்!
ஆதிக் பேசியதை பார்த்த ரசிகர்கள் பலரும் எங்களுக்கு எமோஷனல் வேண்டாம் மாஸ் காட்சிகள் மட்டும் போதும் என பேசி வருகிறார்கள்.

சென்னை : தமிழ் சினிமா மட்டுமின்றி இப்போது இந்திய சினிமா வரை அனைவருடைய கவனம் முழுவதும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் குட் பேட் அக்லி படத்தின் மீதுதான் இருக்கிறத. இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 10 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்திற்கான ப்ரோமோஷன் படிகள் சூடு பிடித்துள்ளது.
ஏற்கனவே படத்திலிருந்து டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்று படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்த நிலையில் அடுத்ததாக படத்தின் இரண்டாவது பாடலான காட் பிளஸ் யூ என்ற பாடலை சமீபத்தில் பட குழு வெளியிட்டது. ஜிவி பிரகாஷின் அசத்தலான இசையில் அனிருத் குரலில் வெளியான அந்த பாடல் தற்போது இணைய முழுவதும் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
அதை தொடர்ந்து அடுத்தடுத்ததாக படம் வெளியாகும் வரை ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கும் சூழலில் ரசிகர்கள் தலையில் குண்டை போடும் வகையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசியிருக்கிறார்.
இது குறித்து பேசி அவர் ” மார்க் ஆண்டனி படத்திற்கு முன்னதாகவே எனக்கு ஒரு படம் செய்து தருவதாக அஜித் வாக்குறுதி அளித்தார். உணர்ச்சிகளே இல்லாத மாஸ் படங்கள் கண்டிப்பாக மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு பெறாது எனவே குட் பேட் அக்லி திரைப்படத்தில் அப்படி பல எமோஷனலான காட்சிகள் இருக்கிறது” என தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் எமோஷனலா வேண்டவே வேண்டாம் மாஸ் மட்டும் எங்களுக்கு போதும் என கூறி வருகிறார்கள்.
ரசிகர்கள் அப்படி கூறி வருவதற்கு காரணமே கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை, வலிமை, விடாமுயற்சி, ஆகிய படங்கள் எமோஷனலான காட்சிகளை கொண்ட படமாக இருந்தது. ஆனால் அஜித்திடம் அவருடைய ரசிகர்கள் எதிர்பார்ப்பது என்னவென்றால் மாஸான படங்களில் நடிக்க வேண்டும் என்று தான் எனவே ஆதிக் இப்படி கூறியுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025