வசூலில் திரையுலகை அதிரவைத்த ‘காந்தாரா’ திரைப்படம் OTT-யில் வெளியானது.!
கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து கன்னடத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற திரைப்படம் “காந்தாரா”. இந்த படத்திற்கு, கன்னடத்தில் அமோக வரவேற்பு கிடைத்ததால் கிட்டத்தட்ட 2 வாரங்களுக்குப் பிறகு தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டார்கள்.
பழங்குடி மக்களுக்குமான நிலப் பிரச்சினையை பண்பாட்டுக் கூறுகளுடன் எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் அருமையாக இருந்ததால் படத்தை பார்த்த பலரும் பாசிட்டிவான கருத்துக்களை கூறினார்கள். கிட்டத்தட்ட இந்த திரைப்படம் 400 கோடி வசூல் செய்தது.
இதையும் படியுங்களேன்- தடைகளை தாண்டி தடம் பதித்த தளபதி விஜய்.! ‘கீதை’ முதல் ‘வாரிசு’ வரை…
திரையரங்குகளில் வெளியாகி வசூலில் கலக்கி வரும் இந்த “காந்தாரா” திரைப்படம் எப்போது ஒடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் காத்திருந்த நிலையில், நேற்று இரவு ஹிந்தி மொழியை தவிர ‘காந்தாரா’ படம் தவிர மற்ற மொழிகளில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. திரையரங்குகளில் படம் பார்க்காத ரசிகர்கள் OTT-யில் படத்தை பார்த்துவிட்டு தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
மேலும், இந்த படத்தில் இடம்பெற்றிருந்த ‘வராஹ ரூபம்’ என்ற பாடல் தங்களது ‘நவரசம்’ பாடலின் ‘திருட்டு வடிவம்’ என வழக்கு தொடரப்பட்டிருந்தது. பிறகு, அந்தப் பாடலுக்கு நீதிமன்றம் தடை விதித்தது. அப்படி இருந்து அந்த பாடல் இன்னும் யூடியூபில் நீக்கப்படாமல் இருந்தது. இதனையடுத்து, இன்று படம் ஓடிடி-தளத்தில் வெளியாகியுள்ள நிலையில், அப்பாடலை அமேசான் நிறுவனம் படத்திலிருந்து நீக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.