ஆஸ்கர் ரேஸிஸ் இருந்து வெளியேறியது ‘2018’ திரைப்படம்.!

Oscar Tovino Thomas

ஆஸ்கர் விருது பட்டியலில் இருந்து “2018” என்ற மலையாள திரைப்படம் வெளியேறியதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இந்த வருடம் மே 5ஆம் தேதி வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. ரசிகர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்த இப்படம் மலையாள ரசிகர்கள் அதிக அளவில் பாராட்டினர்.

கேரள வெள்ள பாதிப்பு குறித்து எடுக்கப்பட்ட இப்படம், ரூ.200 கோடி வரை வசூலித்தது. இதையடுத்து ஆஸ்கர் விருதுக்கு 2018 படம் அனுப்பப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால், சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான பிரிவின் இறுதி பட்டியில் இருந்து 2018 திரைப்படம் தேர்வாகாமல் வெளியேறியுள்ளது.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் உள்ளது – நிர்மலா சீதாராமனுக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி!

டிசம்பர் 22ம் தேதி (இன்று) அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ், பத்து பிரிவுகளுக்கான பரிந்துரைகளின் இறுதிப் பட்டியலை அறிவித்தது. அதில், சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான பிரிவின் இறுதி பட்டியில் இருந்து தேர்வாகாமல் வெளியேறியது.

2018 படம் ஆஸ்கார் விருதுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவுத் தேர்வாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்காவது மலையாளத் திரைப்படமாகும். இதற்கு முன், 1997-ல் ராஜீவ் அஞ்சலின் இயக்கத்தில் மோகன்லால் நடித்த குரு, 2011-ல் சலீம் குமார் நடிப்பில் வெளியான சலீம் அகமதுவின் ஆதாமிண்டே மகன் அபு, 2019-ல் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கிய ஜல்லிக்கட்டு ஆகிய படங்கள் மட்டுமே தேர்வாகின.

ஜூடு அந்தோணி ஜோசப் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்ற 2018 படத்தில் குஞ்சாக்கோ போபன், ஆசிப் அலி, வினீத் ஸ்ரீனிவாசன், லால், நரேன், அபர்ணா பாலமுரளி, சித்திக், மற்றும் டோவினோ தாமஸ் தவிர மேலும் பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்